எகிப்தில் பதற்றம் - முர்ஸிக்காக உயிர்கொடுக்க தயாரென ஆதரவாளர்கள் பிரகடனம்
எகிப்தில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. அரசாங்க எதிர்ப்பாளர்கள் ஒருபுறம் மறுபக்கம் ஜனாதிபதி முர்சி ஆதரவாளர்களும் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகைக்கு 5 கிலோ மீற்றருக்குள் இருக்கும் ரபா அல் அதவியா பள்ளிவாசலையொட்டி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த ஒருசில தினங்களாக தரித்துள்ளனர். இங்கு கடந்த மூன்று தினங்களாக முகாமிட்டிருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் ஹஜ் அல் அஹ்மட் யுஸிப், தாம் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
'ரபா அல் அதவியாவில் தற்போது நாம் நான்கு மில்லியன் பேர் இருக்கிறோம். இது ஆறு முதல் 10 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் எம் அனைவரையும் கொன்றுவிட்டே ஜனாதிபதியை வெளியேற்ற முடியும்' என அவர் எகிப்தின் அஹ்ரம் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

Post a Comment