Header Ads



மஹியங்கனை + பங்கரகம்மன்ன முஸ்லிம்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள்..!

மஹியங்கனையை அடுத்துள்ள பங்கரகம்மன்ன என்ற பகுதியில் 700 க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் அங்குள்ள முஸ்லிம்களையும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்வதாக அந்த ஊர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்று தராவிஹ் தொழுகை நேரங்களில் 8 வாகனங்களில் வந்த பொதுபல சேனாவை சேர்ந்தவர்கள் ஊரைச் சுற்றி நோட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2 ஆம் திகதி பொதுபல சேனாவின் மாநாடு மஹியங்கனையில் நடைபெறவுள்ள நிலையில், அப்பிரதேசமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிரதேச அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டு செல்லவே பட்டப்பகலில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன் மஹியங்கனையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து தகவலகள் சேகரிக்கும் பணியையும் சிலர் மேற்கொளவ்தாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென பங்கரகம்மன்ன பள்ளிவாசல் நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளதாக பிரதேச முக்கியஸ்தர்கள் எமது இணையத்திடம் தெரிவித்தனர்.

6 comments:

  1. Don’t believe our politicians. They are not bothered about Muslims but them. Stop supporting those politicians, join one of the major party and support them in order to solve our problems.

    ReplyDelete
  2. where the Srilankan Muslims ministers? still sleeping? if their scared
    better take one week vacation and go to other country we are Muslims public try what ever we can do pls you all gather and announce to us pls Muslims brothers better to start protest and we must arrange and inform to international community and the media this kind of violence government and BBS to gether doing let see we must come to road.other whys no solution no need to Waite

    ReplyDelete
  3. இலங்கையில் பங்ரகம்மன்ன என்ற ஊா் வரலாற்று சிறப்புமிக்கது என்பது இலங்கையில் உள்ள சிங்களவா்கள் உட்பட பலரும் அறிந்த விடயம் சிங்கள மண்ணரை ஒரு முஸ்லிம் பெண் தன் உயிர் கொடுத்து காத்ததனால்தால் இவ் ஊரை முஸ்லிம்களுக்கு பரிசளித்ததாக நான் படித்துள்ளேன் அதனால்தான் அன்றய சிங்களவா்கள் முஸ்லிம்களை மரக்கள என்றனா் மாரெக்கள என்றால் என்னை பாதுகாத்த இரத்தம் என்பது பொருள் அப்படிப்பட்ட இடத்திலும் முஸ்லிம்களுக்கு அச்சுருத்தலாக இவாகள் செயல்பட்டால் நிச்சயமாக இதனை நடுநிலையான சிங்களமக்கள் வண்மையாக கண்டிப்பா்கள் என நான் நம்புகிரேன் இருந்த போதிலும் அல்லாஹ் தனது திருமறையில் وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ} [آل عمران: 139]பலஹீனப்படாதீா்கள் கவலைப்படாதீா்கள் நீங்கள் உண்மை விசுவாசியாக இருந்தால் நீங்கள்தான் வெற்றியாளா்கள் எனக்கூறுகிறான் எதற்கும் முஸ்லிம்களாகிய நாம் பயப்பட தேவையில்லை நம்முடய ஈமானை நாம் பலப்படுத்துவதே இதற்கு சரியான தீா்வாக நான் கருதுகிரேன் ஈமானில் நமதுமக்கள் உறிதியுடன் இருந்தால் நிச்சயமாக அல்லாவின் உதவி நமக்கு நேரடியாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை நமது மக்கள் மது புகைத்தல் விபச்சாரம் வியாபார மோசடி என்பதை கைவிடணே்டும் தொழுகை நோன்பு சகாத் போன்ற கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் சீதனமில்லாத கல்யாணங்கள் அரங்கேர வேண்டும் இதுபோண்ற பலவிடயங்கள் ஈமானின் வெளிப்பாடு அதனை செய்வோம் யானைப்படையை அழித்த அல்லாஹ்வுக்கு பொதுபாலசேனா எம்மாத்திரம் அனால் ஒன்று மட்டும் உறிதி இலங்கையில் 30 ஆண்டுகளா இருந்த பயங்கரவாதம் முஸ்லிம்களின் மீது கைவைத்தபோது அதுஅழிந்து நாசமாகிவிட்டது இவா்கள் அழிவு வெகுதூரத்தில் இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  4. they are trying to craete new jihadisht movement in srilank

    ReplyDelete
  5. நாடெங்குமுள்ள முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடன்தான் இந்த நிமிடம் வரை வாழ்ந்து வருகின்றனர். இருந்த போதிலும் நமது முஸ்லிம் அரசியல் தலைகளல்லவா நியாயத்துடன் சிந்தித்து செயற்பட வேண்டும்?

    அவர்களின் தலைகளுக்குள் புத்து மண்ணா இருக்கிறது..?

    மூன்று மாகாண சபைத் தேர்தல்கள் நடந்து முடிவதற்கிடையில் இவ்வாறான சின்னச் சின்ன முஸ்லிம் கிராமங்களையெல்லாம் BBS மூர்க்கர்கள் துடைத்துச் சுத்தம் பண்ணி விடுவார்கள் போல் இருக்கிறதே..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. ஒன்றுக்குப் பல கற்கள் அடித்தால் ஒன்றேனும் ஒன்று தாக்காமலா இருக்கும் என்று ஓயாமல் சதிவலை பின்னுகிறது இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகள். தங்கள் பருப்பு வேகாது எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுடன் இருக்கின்றான்.
    "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" (அல்குர்ஆன் 9:51)

    நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)

    ReplyDelete

Powered by Blogger.