போலீஸ் நாயைப் பார்த்து குரைத்த கால்பந்தாட்ட வீரர் கைது..!
இங்கிலாந்தில் போலீஸ் நாயைப் பார்த்து குரைத்த அமெரிக்க கால்பந்தாட்ட வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இங்கிலாந்தில் லண்டன் நகரத்தில் ஸ்கை நியூஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் அண்டோனியோ மாரிசன். இவர் பல்கலைகழக அளவிலான கால்பந்தாட்ட வீரராக உள்ளார். விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தில் உள்ள லண்டனுக்கு வந்தார்.
இவர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த போது போலீஸ் நாயை தொந்தரவு செய்தததாக அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது அண்டோனியோ மாரிசன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காவல்துறையின் கார் ஒன்றின் கதவு திறந்திருந்தது. அதன் அருகில் அண்டோனியோ மாரிசன் வந்தார். காரில் போலீஸ் நாய் ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்தும் அண்டோனியோ மாரிசனுக்கு நாயுடன் வம்பிழுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நாயைப் பார்த்து குரைத்துள்ளார். அவரைக் கண்டு பயந்த நாயும் பதிலுக்கு குரைத்தது. நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு அருகில் பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்தனர். மேலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நாயை தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து சண்டையிட்டதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து லண்டன் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 16ம் தேதி அவர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment