Header Ads



மண்டியிடப்பட்ட ஆசிரியைக்கு கொலை அச்சுறுத்தல்

மாகாண சபை உறுப்பினரால் பாடசாலையில் வைத்து முழந்தாளிடச் செய்யப்பட்ட ஆசிரியையான ஸ்ரீயானி சுசிலா ஹேரத்தின் கணவரால் நவகத்தேகவ காவல்துறையில் நேற்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியையை முழந்தாளிடச் செய்த வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமார, பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்கள், ஆசிரியையின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் Sfm செய்தி பிரிவு குறித்த ஆசிரியையிடம் தொடர்பு கொண்டு வினவியது.

தமது இந்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வார்கள் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜேசப் ஸ்ராலின் பிணையில் வெளிவந்துள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர், பிணை நிபந்தனைகளை மீறும் வகையில் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

2 comments:

  1. ரொளடிகளும் திருடன்களும் பதவிகளில் அமர்த்தப்படும்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்குமா? வெற்றிலையின் சின்னம் தற்போது அசிங்கத்தின், அராஜகத்தின், பித்தலாட்டத்தின், கொள்ளைக்காரர்கள் மிரட்டல்காரர்களின் சின்னம்.

    ReplyDelete
  2. அரசியல் காலத்துலே ஆகப்பெரிய பிச்சக்காரன் இந்த அரசியல்வாதிகள்தானே

    "அட்டையை எடுத்து மெத்தையில் போட்டால் ஒட்டிக்கொள்ளாதா என்ன ? "

    ان الله يستخلفكم فيها وينظر كيف تعملون

    حيوة الدنيا لعب ولهو

    إذا وسد الأمر إلي غير أهله فانتظر الساعة

    ReplyDelete

Powered by Blogger.