இலங்கை பாகிஸ்தானுடன் அணுவாயுத ஒப்பந்தம் செய்யுமா..?
(Vi) ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தனக்கெதிராக வாக்களித்திருந்த இந்தியாவை வெளிப்படையாகவே பழிவாங்கும் முகமாக இலங்கை பாகிஸ்தானுடன் அணுவாயுத ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்ளும் திசையில் நகர்ந்து செல்வதாக ‘த தஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவ்வாறான நிலையில் இதனையொத்த ஒப்பந்தமொன்றை இலங்கையுடன் கூடிய விரைவில் செய்துகொள்ள புதுடில்லி விரும்புகின்ற போதிலும் இந்தியாவுடனான இது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணையை தயாரிக்காமல் இருப்பதன் மூலம் அது காலை வாரிக்கொண்டிருக்கின்றது. பாதுகாப்பு மற்றும் தொழில்சார் நிபுணர்களைப் பயிற்றுவித்தல் உள்ளிட்ட குடிசார் அணுவாயுத ஒத்துழைப்பு அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கவுள்ள விரிவானதோர் அணுவாயுத ஒப்பந்தமொன்றை இலங்கையுடன் செய்து கொள்ள இந்தியா முன் வந்திருந்தது. கடந்த வருடம் ஒக்டோபரில் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்ததுடன் ஒப்பந்த வரைபொன்றையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருந்தது. ஆயினும் அக்காலம் தொடக்கம் மேலும் பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் குறித்த இலங்கையின் பதிலொன்றுக்கென இந்தியா காத்துக்கொண்டே இருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான வெளியுறவுச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் ஒத்துழைப்பு குறித்த பிரதான விடயப் பரப்பாக குடிசார் அணுவாயுத தொழில் நுட்பம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அணுவாயுத ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் தங்களின் உள்நோக்கத்தை இலங்கை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுவரும் கூற்றுக்கள் வெளிப்படுத்துவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. நம்பத்தகாத ??????குன்றிய பதிவுகளைக் கொண்ட நாடொன்றாக தான் நோக்கி வரும் தனது மேற்கு அண்டைய நாடான பாகிஸ்தானுடனான இலங்கையின் பூவாங்கப் பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மார்ச்சில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டிருந்த அமெரிக்க ஆதரவிலான இரண்டாவது பிரேரணைக்கும் இந்தியா ஆதரவளித்திருந்தமை இலங்கையை நிலைகுலைய வைத்திருந்தது.
இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த 25 நாடுகளுள் இந்தியாவும் தென்கொரியாவும் மட்டுமே ஆசிய நாடுகளாகும். பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பதின்மூன்று நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை தெரிந்ததே.

halaal nuclear energy?????
ReplyDelete