பிரசவித்த ஆண் குழந்தையை கொலை செய்து வயலில் வீசிய சம்பவம் (படம்)
அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் பிரசவித்த ஆண் குழந்தையொன்றை கொலை செய்து வயலில் வீசிய சம்பவமொன்று நேற்று (2013.07.15) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசாரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மத்தியமுகாம் - 06 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 30 வயதுடைய வடிவேல் கிருஷ்ணகுமாரி என்பவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தனியாக வீடொன்றில் வசித்துவந்த இவர் கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் குழந்தையை பிரசவித்ததாகவும், அதனை தனது வளவில் புதைத்ததாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாரிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இறந்த குழந்தையின் சடலத்தை மத்தியமுகாம் வைத்தியசாலையின் பிரேத அறையில் குளிரூட்டி இன்மையால் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்குமாறும், சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியை பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் 4ஆவது விடுதியில் அனுமதிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரி பொலிசாரிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


இன்னலிலஹி வாஹின்ன இளைஹி ரஜஹூன்!பாவம் சின்ன பிள்ளைகள் கொடூரமாக கொலை செய்றாங்கல்.பெத்து எடுத்து வளர்க்க முடியாட்டி வேறு யாருக்கு சரி கொடுக்க வேண்டியது தானே,எத்தனையோ பேர் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருகிரங்கள் அவர்கள் சரி பிரோயசனம் அடைவார்கள்.
ReplyDeleteஇங்கு ஒரு விசயம் கவனத்தில் கொள்ள வேண்டும் அதிகமாக குழந்தை பெற்ற பெண்களுக்கு மனநிலை மாற்றம் பாதிப்புக்கு உள்ளார்கள்,இவர்களை உடனே மருத்துவர் உதவியை பெற்று தான் சுகபடுத்த வேண்டும்,மாற்றாக இப்படி பட்ட பெண்களை உடனே கைது செய்து தண்டனை கொடுப்பது எந்த பிரயோசனமும்மில்லை.