Header Ads



சரியான நேரத்தை காட்டாத திருகோணமலை மணிக்கூட்டு கோபுரம்

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் நேரம் சரியான நேரத்தை காட்டுவதில்லையென பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நகரத்துக்கு மத்தியில் அதாவது பொதுச்சந்தை,வங்கிகள், கோனேஸ்வர ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் அதிகமாக செல்லும் வழியில் காணப்படுகின்ற இம்மணிக்கூட்டு கோபுரமே பிழையான நேரத்தை காட்டுவதாகும்.

பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் நகர சபையினர் ஏன் இவ்விடயத்தில் அக்கறையின்றி செயற்படுகின்றனர் எனவும் அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை நம்பி சென்ற பயணியொருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஹொரவ்பொத்தானைக்கு மாலை நேரத்தில் செல்லும் பஸ் வரும் வரை காத்திருந்து மீண் எடுப்பதற்காக மார்கட் சென்று பார்த்தவேளை உரிய நேரப்படி சென்று விட்டது.இருந்தபோதிலும் மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்து வீதியில் அவலப்பட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் கண்ணியா பகுதியைச்சேர்ந்த வயோதிப குடும்பத்தினர் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.