Header Ads



முர்ஸி,இக்வான்களோடு முரண்பட்டோருக்கு துணைநின்றவர்கள் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் பரமவிரோதிகள்


ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும்  மாத்திரமல்ல  தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும்  இலக்கு வைத்தே இராணுவம் சதிப்  புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது...! 

மன்னர்  புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள் (1922-1936)  
மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள்  (1936-1952)  
ஜமால்  அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970)  
அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ்  11 வருடங்கள் (1970-1981)  
ஹுசனி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)

என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒண்பது  தசாப்தங்கள்  அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!  

முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை. அவர்களும் கோரவில்லை. ஆனால்  ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு துணைநின்றவர்கள் சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும்  முஸ்லிம்களினதும்  பரம விரோதிகள்..!   

முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள். இன்றுவரை  இராணுவத்தின் சதி வலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது. 

ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும்   மாத்திரமல்ல  தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும்  இலக்கு வைத்தே இராணுவம் சதிப்  புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது..!  
இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை அல்ல... அன்று  இஸ்லாம் இஸ்லாமியர்களை மீண்டும் அரங்கிற்கு அழைத்து வரும்... அசத்தியம் அழிந்தே தீரும் ..! 

எகிப்திய மண்ணில் கொளுத்திவிடப் படும் சத்தியத் தீபம்  எகிப்தின் மூளை முடுக்குகளில் மாத்திரமல்ல, உலகின் நாளா திசையிலும் கொழுந்து விட்டெரியும் .! அது மத்திய கிழக்கின் விடியலாக வளைகுடாவின் வசந்தமாக வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறித்துச்  செல்லும் !

4 comments:

  1. எகிப்திய மக்கள் தூசை சேற்றால் அகற்றி உள்ளனர்.

    ReplyDelete
  2. ஜனநாயஹமான முரயில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசை ஜனநாயஹமான முரைல்தான் அக ற்றவேண்டும் இது ஜனனயஹத்திட்கு எதிராக விழுந்த பாரிய அச்சுறுத்தல்

    ReplyDelete
  3. ஆக்கிரமிப்பாளர்கள் என்று சர்வதேச ஊடகங்கள் சொல்கின்றனவே தவிர, அது தான் உண்மை என்று எவ்வாறு நம்புவது...?
    ஒருவேளை அந்நாட்டு மக்கள் மன்னர் ஆட்சியைத்தான் விரும்புகிறார்களோ என்னவோ.
    ஆப்கானிஸ்தானில் தங்களின் நாட்டை மீட்க போராடும் மக்களுக்கு கூட இந்த ஊடகங்கள் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டி அழைத்தன..
    சியா களுக்கும் , யூதர்களுக்கும் அவ்வளவு பாரிய வேறுபாடு இல்லை...
    இரண்டு இனமும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் தான்.
    "" இந்த மார்கத்தையும் , முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன் ""

    ReplyDelete
  4. This is what happens when you try to turn Egypt into Saudi! Down with Muslim Brotherhood.

    ReplyDelete

Powered by Blogger.