துடுப்பற்ற ஓடமாக நடுக்கடலில் இலங்கை முஸ்லிம்கள்..!
(UMAR ALI MOHAMED ISMAIL )
அங்கு தொட்டு, இங்கு தொட்டு இப்பொழுது நேரடியாக தொழுகை நடத்தவே கூடாது என்று கூறி விட்டார்கள். மகியங்கனை பள்ளிவாசளில் தாக்குதல் நடாத்தப்பட்டதாக அறிந்தவுடன் யார் யாருடனெல்லாம் தொடர்புகொண்டு பேசியதாக ஹக்கீம் அடித்த தம்பட்டம் இங்கு பொய்யாகிவிட்டது இவரது பேச்சு மகிந்தவிடமே எடுபடவில்லை மகிந்தவின் வால்களிடம் எடுபடுமா?
ஹிஸ்புல்லாஹ் யார் யாருக்கெல்லாம் கடிதம் எழுதினாராம் இன்னும் அது போய்ச்செரவில்லைபோல?தங்களது பதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆள்மாறி ஆட்களிடம் அவசரமாக தொலைபேசி உரையாடல்களை நடாத்துபவர்களுக்கு பொதுப்பிரச்சினைய போனில் பேச முடியாதாம்.
இன்று முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பன அரசுடன் கொண்டுள்ள உறவு தங்களது சொந்த நலுனுக்காகவே குறித்த கட்சிகள் அரசுடன் 100 % ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பது ஏற்கனவே மக்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் கடந்த சில நாட்களாக அது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
இல்லையென்றால் மகியங்கனை பள்ளிவாசல் விடயமாக காரசாரமான முடிவுகள் இதுவரை எடுக்கப்பட்டிருக்கும்.
அரசில் உயரிய பதவிகளில் இருந்து கொண்டு சாதாரண பொதுமகனைப்போல கருத்துக்களை வெளியிட்டு கைபிசைந்துகொண்டு நிற்பது அவமானமாக இவர்களுக்கு தென்படவில்லையா?
போருக்குப் போனவர்கள் எதிரியின் புகழ்பாடி அவனை மண்டியிட்டு அவன் கரத்தை முத்தமிட்டு அவன் போடும் பிச்சைகளிற்க்காக கூனிக்குறுகி கைகூப்பி வணங்கி நிர்க்கின்றார்களே, இவர்களை நம்பியல்லவா பாவம் ஒரு சமூகம் எதிர்பார்ப்புடன் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றது?
இதற்க்கெல்லாம் என்ன விடை இப்படியான இக்கட்டான சூழ் நிலையை சமாளிக்க இலங்கை முஸ்லீம் சமூகம் அரசியல் தலைமைகளை விற்றுவிட்டும், இஸ்லாமிய தலைவர்கள் ஆக்கபூர்வமான எந்த முடிவும் எடுக்கமுடியாதா நிலைக்கும் உள்ளாக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளிக்கும் துடுப்பில்லா ஓடமாக பரிதவிக்கின்றது.
இலங்கையில் இஸ்லாமிய பெயரைக்கொண்ட எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஏன் இவர்கள் இது விடயமாக ஒன்று கூடி பாராளுமன்றத்தில் இது பற்றி கேள்வி எழுப்பக்கூடாது? ஆளும் கட்சியில் இருந்தால் அநீதிகளைப் பார்த்துக்கொண்டு வாய்பேசா மௌனிகளாக வாளாவிருக்கவேண்டுமா?
எந்த அமைச்சர் எந்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த அவசர நிலை பற்றி சர்வதேச ஊடகங்களுக்கு எடுத்துக்கூறி இந்த இக்கட்டான முடிச்சை அவிழ்க்க முயன்றிருக்கின்றார்கள்? ஒவ்வொருவரும் தத்தம் கோட்டாக்களை பெற்றுக்கொள்வதற்காக கோழைகளாகி நிற்கின்றார்கள். ஹஜ் கோட்டா ஆடைக்கோட்டா பெட்ரோல் செற் கோட்டா என்று எத்தனையோ கோட்டாக்களுக்கு நாம் விலைபோய் விட்டோம்.
அந்தோ பரிதாபம் முகமூடியணிந்த இந்த ஆசாமிகளின் பாசாங்குப் பேச்சுக்களுக்கு ஏமாந்த இலங்கை முஸ்லீம் சமுதாயம் இஸ்லாமிய கடமைகளை அனுசரிப்பதற்கு பேரினவாதிகளால் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்து சுதந்திர புருசர்களாக சமயக்கிரிகைகளை இடரின்றி மேற்கொள்ள என்னதான் செய்யப்போகிறது எதிர்க்காலத்தில்..???

வேறு வழியில்லை.
ReplyDeleteஸ்ரீ.ல.மு.காவும், ஏனைய முஸ்லிம் கட்சிகளும் கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் அரசுடன் சேர்ந்து கிழக்கு முஸ்லிம் சமூகத்திற்குச் செய்த கழுத்தறுப்புக்கு வடக்குத் தேர்தலில் முஸ்லிம் சமூகம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
அதற்கு வழி: த.தே.கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் ஒட்டு மொத்த வட புல முஸ்லிம் சமூகத்திற்கும் ஓர் பகிரங்க அறிவிப்பையும், உத்தரவாதத்தையும் தமது கட்சியின் அங்கீகாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும்.
கூட்டமைப்பு மாகாண ஆட்சிக்கு வருமாயின் வடக்கு முஸ்லிம்களின் அத்தனை உரிமைகளையும் மாற்றாந்தாய்க் கண்ணோட்டத்துடன் பாராது தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையிலலும், கடந்த காலத் தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அமையும் வகையிலும் செய்ற்படுவோம் என உத்தரவாதமளிக்க வேண்டும்.
வடபுல இடம்பெயர் முஸ்லிம்கள் அனைவரையும் மீண்டும் உள்வாங்கி அவரவர்களின் முன்னைய இருப்பிடங்களை வழங்க வேண்டும். அனைத்து நிவாரண நடவடிக்கைகளிலும் பாரபட்சமின்றி முஸ்லிம் சமூகத்திற்குரிய பங்கினை வழங்குவதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறான உத்தரவாதங்களுடன் கூட்டமைப்பு வேட்பாளராக முஸ்லிம் புத்திஜீவிகளையும் உள் வாங்கி தமது சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும், கூட்டமைப்புக்கும் வாக்களிக்க வகை செய்ய வேண்டும்.
அப்படியொரு நிலைமை உருவானால்தான் வட புல முஸ்லிம் மக்களின் வாக்குகள் போலி முஸ்லிம் கட்சிகளுக்கும், பேரினவாதக் கட்சிகளுக்கும் செல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்து தமிழ்பேசும் வடபுல மாநிலம் கூட்டமைப்பின் கைகளுக்கு இலகுவாக வருவதோடு இந்த பித்தலாட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், பேரினவாத அடக்குமுறை ஆட்சியாளர்களுககும் பாடமாகவும், படிப்பினையாகவும் அமையும்.
செய்வார்களா..? கையறு நிலைக்குத் தள்ளிய இந்த முஸ்லிம் தலைமைகளுக்கு செருப்படி கொடுப்பார்களா?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
I RED YOUR COMMENCE ITS VERY NICE WE SHOULD DO THAT THEN ONLY THEY WILL REALIZE PLS DON'T WAITE NO NEED OUR POLITICIANS THIS IS THE BETTER IDEA WICH YOU MENTION THANK YOU BROTHER I HOPE TAMIL LEADERS WILL TAKE CARE OUR MUSLIMS HERE AFTER WITH GOOD JUSTICE.
ReplyDeleteநன்றி புவி ரஹ்மத்துல்லாஹ்
ReplyDeleteஇந்த கோரிக்கைகளுக்கு அவர்கள் செவி சாய்ப்பார்களா?
துரத்தப்பட்டு மீண்டும் வந்தவர்களை ,திருப்பி அனுப்புவதற்கு எத்தனித்து முஸ்லீம்களின் காணிகளை பலவந்தமாக விற்கச் சொல்லும் நடவடிக்கைகள் திரைமறைவில் பல்வேறுபட்ட குழுக்களால் முடுக்கப்பட்டிருகும் இந்த நிலையில் கடந்த காலங்களில் வடக்கு முஸ்லீம்களுக்கு செய்த கழுத்தருப்புகளை மீண்டும் செய்யமாட்டார்கள் என்று எப்படி நம்புவது?
Very good statement, but I don’t think that Muslims realized their situation. They still support our politicians.
ReplyDeleteமுஸ்லிம்கள் தனிக் குழுவாக கேட்டு அந்த குழு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தான் சிறந்ததாக அமையும். நம்பி நடவாதே நம்ப நட.
ReplyDeleteஏதோ நினைவுகள் மனதிலே மலருதே
ReplyDeleteகாற்றோடு காற்றாகவே....
எல்லாம்
காற்றோடு காற்றாகவே.
Always blaming everything on politicians is not going to solve our problems. We have been living in harmony with majority Sinhalese for many hundred years. This distrust between our communities is recent phenomenon, for which, we should take half of the blame. Our Sinhalese brothers started to look at us with suspicion, lately, because we too, tended to alienate our self from mainstream Sri lankan community activities and dress and conduct our self as if we are living in a majority Muslim state.
ReplyDeleteFirst lets see what we can do as public do to rebuild these bridges, and reestablish the trust. I do not mean the political circus of having receptions for priests and offering gifts, rather genuine people to people contacts as taught by Rasoolullah. While hijab is a religious obligation, covering the face is extremism in a multicultural society, inviting equally extremist reaction from the suspicious majority. Jubba, Thorf, all these are unnecessary vanity with hardly any substance. So as a learned academic said, we should live as Sri Lankan Muslims here, rather than Muslims in Sri Lanka.
முதலில் இவர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்
ReplyDeleteபின்பு அவன் ஒரு நல்ல முஸ்லிமாக முஸ்லிம் சமூகத்திற்க்கு
நல்லது செய்ய மனம் வரும்
இவர்கள் எல்லாம் நாளை மறுமையில் என்ன பதில் சொல்லப் போகிரார்களோ
சமகால வடபுல அரசியல் நிலவரம் குறித்து வடக்கு வாக்காளர்கள் மாத்திரமன்றி ஐ.நா.மன்றமும், சர்வதேச நாடுகளும் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது.
ReplyDeleteஇந்த வேளையில் நாம் எமது முஸ்லிம் சமூக அரசியல் வியாபாரிகளின் புராணங்களைக் கேட்டு எமது வாக்குப் பலத்தினை மண்ணாக்காமல் முடிந்த வரை மாகாணப் பெரும்பான்மையாளர்களிடம் எமது கோரிக்கைகளை நேரடியாக முன்வைப்பதே அறிவுடமையாகும்.
எமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டு அதனை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் முழு மாகாணத்திற்கும் ஒப்புவித்த பின்னர் அதிலிருந்து மீறிச் செயற்பட்டு தொடர்ந்தும் இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காக அவர்கள் ஜனநாயக வழியில் குரல் எழுப்ப முடியாது. அதனை சர்வதேச நாடுகளும் இப்போது அங்கீகரித்து உதவுவது போல் உதவவும் மாட்டாது.
வட மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்து அரசியல் உரிமைகளையும் அவர்களால் பெற்றுக் கொண்டதாக இறுமாப்படைந்து விட முடியாது. கிழக்கும் இருக்கின்றது. அங்கு வாழும் முஸ்லிம்களின் மனங்களையும் அவர்கள் வென்றெடுத்து கிழக்கிலும் ஏகப் பெரும்பான்மை ஆட்சியொன்றை நிறுவிக்காட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கின்றது.
இதனை, ஸ்ரீ.ல.மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவியைத் தருவதாகக் கூறி அவர்களின் ஆதரவைக் கோரிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் நிகழ்வில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
மேலும், வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ள உயர்திரு. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் சராசரி அரசியல்வாதியல்ல. அவர் சட்டத்துறை விற்பன்னர். முன்னாள் இந்நாட்டின் நீதியரசர்.அவருக்கு நன்கு தெரியும், தேர்தல் வாக்குறுதியை மீறுவதன் பாரதூரமும், வரலாற்று வடுவும் என்னவென்பது.
எனவே முஸ்லிம்களான நாம் 'விசுவாசிகளாகவும்' இருக்கின்றோம். 1/4 நுற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தைலைமைகளையே நம்பி நம்பி வாக்களித்து வாக்களித்து அவர்கள் உப்பரிகைகளிலும், நாம் தெருவோரங்களிலுமாகவே இருக்கின்ற இன்றைய நிலையில் ஒரு முறை எமது மொழியுடைய தமிழ்ச் சமூகத் தலைமைகளையும் நம்புவதில் இதுவரை வராத கேடு என்னதான் வந்துவிடப்போகின்றது?
'ஹுதைபிய்யா உடன்படிக்கை'யை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும் நாம் எல்லா விடயங்களிலும் 'நம்பாமல் நடந்து' கொள்ள முடியாது. சில விடயங்களில் 'நம்பியும்' நடக்கத்தான் வேண்டும்.
வடக்கு முஸ்லிம் சமூகம் த.தே.கூட்டமைப்பை நம்பி விசுவாசித்து வாக்களிப்பதற்கு முன்னால் அவர்கள்தான் எமது கோரிக்கைகளை ஒன்றுக்குப் பத்து முறைப் பரிசீலித்து எமது மக்களுக்கு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்மூலமாக வாக்களிக்க வேண்டும்.
அவர்களின் வாக்கு நமக்குக் கிடைத்தால் நாம் அவர்களுக்கு வாக்களிப்பதில் என்ன தயக்கம்?
இதுவெல்லாம் சாத்தியமாகாத பட்சத்தில் 'குருவி'யின் கருத்துப்படி முஸ்லிம்கள் தனிக்குழுவாகப் போட்டியிடலாம். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் எமது வங்குரோத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பது அறிவுடமையாகாது. அவர்களுக்கு நாம் பிடிப்பினையூட்ட வேண்டும்.
தமிழ் ஆயுதக் குழுவாக இருந்து ஒரு காலத்தில் அட்டகாசம் செய்த ஈபிடீபி யினருடன் அ.இ.மு.கா. தலைவர் றிசாட் பதியுத்தீன் கூட்டுச் சேர முடியுமாக இருந்தால் ஏன் முஸ்லிம் வாக்காளர்கள் த.தே.கூட்டமைப்புடன் கூட்டுச் சேர முடியாது?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-