புத்தளம் - பாலாவியில் இப்படியும் நடந்தது
அன்மையில் புத்தளம் பாலாவி அல்-காசிம் சிட்டியில் இடம்பெற்ற ஒரு திருட்டுப்பற்றி மற்றவர்களுக்குப்படிப்பினையாக இருக்கும் என்பதற்காக இதை எழுத விரும்புகிறேன்.
இப்பிரதேச கொஞ்சம் ஒதுக்குப்புறமான வீடொன்றுக்கு காரில் வந்த இருவர் வெளிநாடொன்றுக்குச் சென்று வந்த யுவதி ஒருவரின் வீட்டைத்தேடி வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதோடு அக்குடும்பத்துக்கு முப்பதினாயிரம் பணமும் தருகிறோம் என்று கூறி முற்பணமாக இருபதினாயிரத்தையயும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர் அவ்வேளை வீட்டில் தாயே இருந்துள்ளாள் மகள் தையல் நிலையம் ஒன்றுக்கு வேலைக்காகச் சென்று திரும்பபும்போது தாய் நடந்தவற்றை மகளிடம் கூற மகள் தாய்க்கு ஏசிவிட்டு விரும்பமென்றால் தாயையே வெளிநாட்டுக்குச் செல்லும்படி கூறிவிட்டு அவள் தனது கடமைக்குச் சென்று விட்டாள்.
அடுத்தநாள் முதல்நாள் காரில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றிலே அவ்வீட்டுக்கு வந்துள்ளனர். தாயோ மகளுக்கு மீண்டும் வெளிநாடு செல்ல விருப்பமில்லை என்று கூறவும் கொடுத்த இருபதினாயிரத்ரைதத் திரும்பப்பெற்றவர்கள் உங்களிடம் கலர் மங்கிய நகைகள் இருப்பின் தாருங்கள் அவற்றினை புதியது போல் ஆக்கித்தருகிறோம் என்று கூற கையிலணிந்திருந்த மோதிரம் ஒன்றை அவள் கொடுத்துள்ளாள்.
அதனை பளிச்சென ஆக்கிக் கொடுக்கவும் வேறு ஏதாவது நகைகள் இருந்தாலும் தாருங்கள் அவற்றினையும் இது போல் ஆக்கித்தருகிறோம் எனக்கூற தாயோ வீட்டினுள்ளிருந்த இரண்டு பவுன் தங்க நகைகளையும் கொண்டு வந்து இதனையும் மினுக்கமாக்கித்தரும்படி கூறவும் வந்தவர்கள் ஏதேதோ செய்துவிட்டு அதனை கடதாசி ஒன்றிலே நன்றாகச்சுத்திக்கட்டி ஒருசில மணித்தியாலங்களின் பின்பு அதனைத்திறந்து பார்த்தால்தான் அது முறைப்படி நன்கு பளிச்சிடும் என்றுகூற அதன்படி தாயும் அவிழ்க்காமல் அதனை வைத்துவிட்டு முதலில் மினுக்கிக் கொடுக்கப்பட்ட மோதிரத்தை நல்ல வாசமாக இருக்கிறதே என்று முகர்ந்துள்ளாள் சிறிது நேரத்தில் அவள் மயக்கமாக மோதிரம் அரைப்பவுன் தங்கமாலை இரண்டு பவுன் அனைத்தயும் லாவகமாக திருடிக் கொண்டு சென்று விட்டனர்.
உள்ளே இருந்த பேப்பரை பிரித்துப்பார்த்தால் அது வெறும் மண்பார்சல் மயக்கநேரத்தில் வந்தவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் வீடு அல்லோல கல்லோலப்பட்டது.எந்தப்பயனும் இல்லை. ஏமக்கும் இதில் படிப்பினை உண்டு.
.jpg)
காசு எவன் கொண்டு வந்து கொடுத்தாலும் வாங்கக்கூடிய மன நிலை இருந்தால் ஏமாறக்கூடியது சின்ன விடயம்தானே அதிலும் பெண்களை ஏமாற்றுவது பெரியவேலையாக அவர்களுக்கு இருந்திருக்காது என்பதற்கு இச்சம்பவம் நல்லதொரு உதாரணம். தலைப்பு ”சிரிக்கலாம் வாங்க ஆனால் பெண்கள் சிந்திக்க மறந்திடாதீங்க” என்று போட்டால் ஓகே.
ReplyDeletePERASAI PERU NATTAM ARIMUHAMILLATHAVARHALIDAM EPPADI NADAKANUM ENPATHAI PENGAL PURINTHAL SARI, DO NOT HAVE RELATIONSHIP WITH UNKNOWN PERSONS PARTICULARLY LADIES.
ReplyDelete