பிரதேச அரசியல்வாதிகளின் ஊழல், பாலியல் குற்றச்சாட்டு - அரசாங்கம், ஜனாதிபதின் கௌரவம் பாதிப்பு
(Adt) கூட்டணி அரசாங்கத்தின் பிரதேச சபைத் தலைவர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளால் நாட்டின் உள்ளூராட்சி சபைகள் அபகீர்த்திக்கு உள்ளாவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தின் பிரதேச அரசியல்வாதிகளின் ஊழல், மோசடி, பாலியல் குற்றச்சாட்டு என்பவற்றால் அரசாங்கத்தினதும், கட்சியினதும், ஜனாதிபதியினதும் கௌரவம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கட்சி செயலாளர் என்ற அடிப்படையில் கூட்டங்களிலோ ஊடக சந்திப்புக்களிலோ கலந்து கொள்ள முடியாதுள்ளதாகவும் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவை - தமன்கடுவ பகுதியில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது எனவும் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரின் இக்கருத்துக்கு எமது காத்தான்குடி நகர சபை நல்லதொரு உதாரணமாகும்!
ReplyDeleteஇச்சபை, ஆளும் கூட்டணியிலுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியில் உள்ளது.
இச்சபையின் தவிசாளரும், ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவரும் தலா 500,000 ரூபா சரீரப் பிணையிலும், மற்றுமொரு உறுப்பினர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலுமாக இவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிணையில் வெளிவந்துள்ளனர்.
இப்படியானவர்களுக்கு மஹிந்த சிந்தனை மூலம் இறுக்கமான ஒழுக்கக் கோவைகள் முதலில் கையளிக்கப்பட்டு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அப்போதுதான் அரசாங்கத்தின் மீது பிரதேச மக்களுக்கு மதிப்பு உண்டாகும்
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இதெல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமல் விட்ட தவறுகள்தான் இன்று நடக்கின்றது, இவைகள் ஆங்காங்கே நடந்தால்தான் வேறு வேறு பிரச்சினைகளை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்பதற்காக சிலவைகளை அரசாங்கமே பின் நின்று நடாத்திவருவது சாணக்கியமான அரசியலாம். ஆனால் படைத்தவன் ஒருவன் இருக்கின்றானே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள் இன்றும் பாதிக்கப்படுகின்றார்கள் யாராவது ஏதாவது பதிலுக்கு செய்தார்களா இல்லை பொறுமையாகத்தான் இருக்கின்றார்கள், ஆக இறைவன் பொறுமையாகவுள்ளவர்களுக்கும் நீதி செலுத்தவேண்டுமல்லவா? அதனால்தான் தற்போதைய அரசாங்கம் தன் கையைக்கொண்டு தன்கண்ணையே குத்திக்கொண்டதுபோல சிலகாரியங்களைச் செய்து தன் நாட்டுமக்கள் மத்தியிலும் அதுவும் குறிப்பாக தன் பெளத்த சமுகத்தின் மத்தியிலும் அத்துடன் உலக நாடுகளின் முன்னிலையிலும் தன் செல்வாக்கையும் நன்மதிப்பையும் இழந்து நிற்கும் நிலைமை இன்று உருவாகியுள்ளது. அல் ஹம்துலில்லாஹ் இதில் சந்தோசப்படக்கூடிய விடயம் என்னவென்றால் பெரும்பானமையினரே இவ்வரச குடும்பத்தினரின் ஊழல் அடாவடித்தனங்களையும் மோசடிகளையும் உணர்ந்துகொண்டமையும் இனிமேல் இவ்வரசாங்கத்தற்திற்கு ஆதரவை வழங்காது என்பது புலப்படுகின்றது. அதையும் தாண்டி இவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எந்தளவும் கீழிறங்கிய நிலையில் செயல்படவும், எதுவித ஆபத்தான காரியங்களாயினும் அவைகளைச்செய்ய தயாராகவும் உள்ளார்கள் என்பதை யாவரும் கருத்திற்கொள்ளவேண்டும்.
ReplyDeleteநிலைமை இப்படியிருக்கும் போது மானம் எதற்கு கெளரவம் எதற்கு எல்லாம் பொய்வேசம்தான்.