மாகாணசபைத் தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகள்
செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், புதிய வாக்குப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதுவரை மரத்தினால் செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால், பல்வேறு நாடுகளில், தற்போது பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வடக்கு, மத்திய, வடமேல் மாகாணசபைத் தேர்தலில் தேர்தல் திணைக்களம் பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகளை பயன்படுத்தவுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்குப்பெட்டிகளைத் தயாரிப்பதற்கான மகோகனி மரம் நியாயமான விலைக்கு, போதியளவில் பெறமுடியாது என்பதாலும், தயாரிப்புச் செலவு அதிகம் என்பதாலும், மரத்தினாலான வாக்குப்பெட்டிகளுக்கு விடைகொடுத்து விட்டு பிளாஸ்டிக் பெட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)
என்ன பணியாரத்தால செய்த பெட்டி என்றாலும் பறவாயில்லை கடைசியில் பெட்டி மாறாமல் இருந்தால் போதும்.... மக்கள் சரியாகத்தான் தெரிவுசெய்கின்றார்கள் பயங்கரவாதிகள்தான் அவர்கள் வெல்லவேண்டும் என்று சதிசெய்கின்றார்கள். இந்த நாட்டில் நீதி இந்த முறையாவது தலைதுக்கி உண்மையான முடிவு தெரியப்படுமா?
ReplyDelete