மடவளை மதீனா மத்திய கல்லூரியில் விஞ்ஞான தொழில் நுட்பப்பிரிவு
(JM.Hafeez)
மகிந்தோதய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி அடையும் ஆயிரம் பாடசாலைகள் பல்வேறு வகையிலும் சிறப்படைந்து வருவதாகவும் கண்டி மாவட்டத்தின் மதீனா மத்திய கல்லூரி தனிச்சிறப்படைவதாகவும் மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.எம்.எம்.நஸார் தெரிவித்தார்.
மகிந்தோதய ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித்தித் திட்டத்தின் கீழ் மடவளை மதீனா மத்திய கல்லூரியில் இன்று விஞ்ஞான தொழில் நுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவமும் இன்று இடம் பெற்றது,(4.7.2013)அதிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கண்டிமாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லொகான் ரத்வத்தை சார்பாக அவரது இணைப்பு அதிகாரி டப்ளியூ.தர்மசிரி, பாத்ததும்பறை பிரதேச சபைத் தலைவர் சுதர்மா வெலகெதர, வத்துகாமம் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பி.ஜே.கே. முத்துகுமாரன, மத்திய மாகாண முஸ்லிம் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.எம்.நஸார்,மடவளை ஜாமியுல்கைராத் பள்ளி பரிபாலன சபைச் செயலாளர். மௌலவி எம்.எம்.ஹில்மி (தீனி) உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய உதவிக்கல்விப்பணிப்பாளர் என்.எம்.எம். நஸார் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய மாகாணத்தில் மொத்தம் 156 இடை நிலைப்பாடசாலைகள் மகிந்தோதயத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன. அதில் ஒன்றாக இப்பாடசாலையும் அடங்கும். அதேபோல் தொழில் நுட்பப் பாடங்களைக் கொண்ட உயர்தர வகுப்புக்கள் உள்ள 32 பாடசாலைகள் மத்திய மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதில் ஒன்றாக இப்பாடசாலை அமைந்துள்ளது. அத்துடன் மத்திய மாகாணத்தில் மகிந்தோதய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் 13 முஸ்லிம் பாடசாலைகளில் மதீனா மத்திய கல்லூரியும் ஒன்றாகும். அதே நேரம் கடந்த பல தசாப்தங்களாக ஒரே பாடசாலையாக இயங்கிய இப்பாடசாலை இவ்வருடம் முதல் அல் முனவ்வரா ஆரம்பப் பாடசாலை என்றும் மதீனா மத்திய கல்லூரி என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்தன் மூலம் இவ் ஊருக்கு இரண்டு பாடசாலைகள் கிடைத்துள்ளன. இப்படிப் பல வகையில் மகிந்தோதயத் திட்டத்தின் மூலம் மடவளையும் மதீனா மத்திய கல்லூரியும் பல கோணங்களில் சிறப்படைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.


Post a Comment