Header Ads



'சகல மக்களுக்கும் அவர்களின் அடையாளத்திற்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும்'

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எனது உறவினர் தான். இருப்பினும் எங்களுக்கிடையில் அரசியல் ரீதியான எந்தவொரு தொடர்புகளுமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

நான் நம்புவது வர்க்க வேறுபாடுகளையே இன ரீதியான அடையாளங்களை அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கும் சி.வீ. விக்கினேஸ்வரன் எமது உறவினர் தான். என்றாலும் எங்களுக்குள்  அரசியல் ரீதியில் எந்தவொரு தொடர்புகளும் இல்லை. எனது அரசியலும், உறவு முறையும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோகும் விடயங்கள் அல்ல. நான் 15வயதில் எனது பாடசாலை பருவத்தில் இருந்தே அரசியலை ஆரம்பித்தேன். 

அத்துடன் நான் கம்யூனிஸ்வாதி, குல பேதங்களையும் வகுப்பு வாதங்களையும் எதிர்ப்பவன். நாங்கள் வர்க்க போராட்டத்தையே நம்புகிறோம். இன அடையாளங்களை அல்ல. இதனடிப்படையில் நாட்டில் சகல மக்களுக்கும், அவர்களின் அடையாளத்திற்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கான அரசியலையே நான் தெரிவு செய்துள்ளேன். இதனை உறவு  முறையாலோ அல்லது வேறு எந்த விதத்தினாலோ மாற்ற முடியாது என வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார். 

4 comments:

  1. இலங்கைக்கு விடிவு காலம் வரவேண்டுமென்றால் உம்மைப்போன்றவர்கள் நாட்டின் தலைவர்களாக இருக்கவேண்டும் பல்லின மக்களும் உரிமைகளுடன் வாழவேண்டுமென்ற எண்ணம் யாருக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு பெளத்த மக்கள் விட்டுக்கொடுக்கவேண்டும் ஆனால் இது பெளத்த நாடு என்றதை எப்போது நிலை நாட்டியே இருப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    ReplyDelete
  2. இலங்கைக்கு விடிவு காலம் வரவேண்டுமென்றால் உம்மைப்போன்றவர்கள் நாட்டின் தலைவர்களாக இருக்கவேண்டும் பல்லின மக்களும் உரிமைகளுடன் வாழவேண்டுமென்ற எண்ணம் யாருக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு பெளத்த மக்கள் விட்டுக்கொடுக்கவேண்டும் ஆனால் இது பெளத்த நாடு என்றதை எப்போது நிலை நாட்டியே இருப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    ReplyDelete
  3. முன்னாள் நீதியரசர் உயர்திரு. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் சமகால அரசியல்வாதிகளைப் போன்ற குறுகிய பார்வை கொண்டவரல்ல என்பது முழு நாட்டு மக்களுக்கும் தெரிந்ததேயாகும்.

    அவர் ஒரு நீதிமான். சட்டத்தை சரியாகப் பயின்று அதன்படி வாழ்ந்தவர். எந்தவொரு மனித உரிமை மீறலிலோ அல்லது ஊழல் மோசடிகளிலோ ஈடுபட்டிராதவர். அவரின் அறிவும், அனுபவங்களும் இந்நாட்டு மக்களுக்கு சுவை தரும் கனியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    அவரது வயது வந்த மக்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணைகளுடன் வாழச் சம்மதித்ததை நாம் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தேவையில்லை. அது ஒரு தந்தைக்குரிய கடமையாகும்.

    அதேபோல் அவர் இப்போதுதான் வடபுல மக்களுக்குத் தந்தையாகும் வாய்ப்பைத் தருமாறு கோரி முன்வந்துள்ளார். அதற்கு வடபுல மக்கள் தமது ஆணைகளை வழங்கினால் மக்களின் விருப்புக்கமைய தேவைகளையும், உரிமைகளையும் சட்டத்தின் அடிப்படையில் பெற்றுத் தரும் ஒரு மாநிலத் தந்தையாக இருப்பார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. You can give your fully support and corporate with other minority party to collect this kind of view all over the Island. Will they agree?

    ReplyDelete

Powered by Blogger.