தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் குழு செலுத்தவேண்டிய பணத்தொகை
(ஏ.எல்.ஜுனைதீன்)
நடைபெறவிருக்கும் வடக்கு, வடமேல் மற்றும்
மத்திய மாகாண சபைகளுக்கு போட்டியிடும் சுயேட்சை
வேட்பாளர் குழு தலா ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப் பணம் செலுத்த
வேண்டும் என தேர்தல்கள் செயலகத்தால்
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாகாண சபைக்குப் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள்
மாவட்ட ரீதியாகச் செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகை பற்றிய விபரம் வருமாறு:-
|
மாவட்டம்
|
வேட்புமனு அளிக்கப்படக்கூடிய அபேட்சகரின் எண்ணிக்கை
|
தொகை
|
|
கண்டி
|
32
|
64000/=
|
|
மாத்தளை
|
14
|
28000/=
|
|
நுவரெலியா
|
19
|
38000/=
|
|
யாழ்ப்பாணம்
|
19
|
38000/=
|
|
கிளிநொச்சி
|
07
|
14000/=
|
|
மன்னார்
|
08
|
16000/=
|
|
வவுனியா
|
09
|
18000/=
|
|
முல்லைதீவு
|
08
|
16000/=
|
|
குருணாகல்
|
37
|
74000/=
|
|
புத்தளம்
|
19
|
38000/=
|
சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை இம்
மாதம் (ஜூலை) 31 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.
அரசியல் கட்சிகள் இலவசமாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடியும் எனவும்
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment