கவலைப்பட வேண்டாம்..!
(Mohamed Nishad – Al Azhar University, Cairo)
ஜனாதிபதி முர்சி இஸ்லாத்தின் எதிரிகாளால் மிக திட்ட மிட்ட அடிப்படையில் பதவி கவிழ்க்கப்பட்டமை (03-07-2013) இஸ்லாத்தை நேசிக்கும் ஒவ்வொரு ஈமானிய உள்ளத்துக்கும் பெரும் வேதனை அளிக்கும் நிகழ்வு என்பதில் எவ்வித ஐயமில்லை.
ஆனால் கவலைப்படாதீர்கள் !! நினனைத்து பாருங்கள் !! உமர்(ரழி ) நயவாஞ்சகர்களால் கொலை செய்யப்பட்ட சூழலை நினைத்து பாருங்கள்! கவலைப்படவேண்டாம்! இஸ்லாம் மரணிக்கவில்லை.வியாபித்தது. உஸ்மான்(ரழி) நயவாஞ்சகர்களால் கொலை செய்யப்பட்ட சூழலை நினைத்து பாருங்கள்! கவலைப்படவேண்டாம்.இஸ்லாம் மரணிக்கவில்லை. வியாபித்தது . தாத்தாரியர்களால் முஸ்லிம் தேசங்கள் ஆக்கிரமிக்க பட்டதை நினைத்து பாருங்கள்! கவலைப்படவேண்டாம்! இஸ்லாம் மரணிக்கவில்லை .வெற்றி பெற்றது.சிலுவை படையெடுப்பால் முஸ்லிம் உலகும் குத்சும் ஆக்கிரமிக்க பட்டதை நினைத்து பாருங்கள்! கவலைப்படவேண்டாம்! ! இஸ்லாம் மரணிக்கவில்லை .வெற்றி பெற்றது 1924 இல் இஸ்லாமிய கிலபாத் வீழ்த்த பட்ட இருண்ட சூழலை நினைத்து பாருங்கள்! கவலைப்படவேண்டாம்! இஸ்லாம் மரணிக்கவில்லை. மீண்டும் புத்துயிர் பெற்றது. துருக்கிய இஸ்லாமிய எதிரி அதாதுர்கின் கல்லறை முன்னால் போய் “ இதோ நாம் மீண்டும் வந்து விட்டோம் “ என கூறிய இஸ்லாமிய தளபதி அர்பகானை நினைத்துபாருங்கள். கவலைப்படவேண்டாம்! இஸ்லாம் மரணிக்கவில்லை.இரானுவ புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட இஸ்லமிய வாதி அர்பகானின் மாணவன் ஒர்துகான் மீண்டும் 5 வாருடங்களின் பின் இதோ நான் வந்தது விட்டேன் என்று கூறி இன்றுவரை ஆட்சி செய்வதை நினைத்து பாருங்கள்! கவலைப்படவேண்டாம்! முர்சி வீழ்ந்து விட்டார் என்று கவலைப்படவேண்டாம்! இஸ்லாம் மரணிக்கவில்லை.
இந்த பின்னணியில் இக்வானுள் முஸ்லிமூன் இயக்கம இஸ்லாத்தை எத்திவைக்கும் பாதையில் ஆட்சியை ஒரு சாதனமாக மட்டுமே கருதுகின்றது. அது அவர்களின் இலட்சியமல்ல.எனவேதான் அதன் 85 வருட வரலாற்றில் ஒரு வருடமே ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் 80௦ நாடுகளில் கிளைவிட்டு வியாபித்துள்ள மிகப்பெரும் விருட்சம் அது.
இகவான்கள் வரலாற்றில் என்று மில்லாதவாறு எகிப்தில் ஆட்சியில் இருந்த கடந்த ஒரு வருட காலத்தில் மிகப்பயங்கரமாக எதிரிகளால் கொச்சை படுத்தப்பட்டு அசிங்க படுத்தபட்டு மக்கள் முன் காட்டபட்டனர்.சிலவேளை அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் நுழைய எடுத்த முடிவு தவறான இஜ்திஹாத் ( தீர்மானம் ) ஆகஇருக்கலாம்.அவர்களும் மனிதர்கள் என்றவகையில்.முர்சியின் 4 வருடமும் இத்தகைய சூழலில் தொடர்ந்தால் இஸ்லாமிய இயக்கம் அதன் தாவா பகுதியின் பெரும் அடைவு ஒன்றை இழக்கும் நிலை இருந்தது.எனவே பெரும் தீயாகிகளையும் , இஸ்லமிய அறிஞர்களையும், பெருமளவில் கொண்ட இவ்வமைப்பை இந்த இருண்ட சூழலில் இருந்து பாதுகாப்பதற்கான அல்லாஹ்வின் ஏற்பாடாக இந்நிகழ்வு இருக்கலாம். கவலைப்படவேண்டாம்.
(( நீங்கள் ஒரு விடயம் அதில் உங்களுக்கு நன்மை உள்ள நிலையில் அதனை வெறுக்கலாம். நீங்கள் ஒரு விடயம் அதில் தீமை உள்ள நிலையில் அதனை விரும்பலாம்.அல்லாஹ்வே யாவற்றையும் நான்கறின்தவன். நீங்கள் அறியமாட்டீர்கள்.)) ( அல் - பகரா: 216)
கடைசியாக ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் .அதுதான் சட்ட பூர்வ்மாக தெரிவு செய்ய பட்ட ஜனாதிபதியை வீழ்த்திய எதிரிகாளின் சந்தோஷம் சொற்ப காலமே நிலைக்கும்.இன்ஷாஅல்லாஹ்.ஏனெனில் எகிப்து ஒரு முஸ்லிம் நாடு. ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பெரும் தொகை. பெரும் புரட்சி நடந்து முடிந்த நாடு. எனவே மில்லியன் கணக்கான ஆதரவாளர்களின் எதிர்வினை எப்படி அமையும் என்பதற்கு எதிர்வரும் நாட்கள் பதில் சொல்லும். கவலைப்படவேண்டாம்.!!

Yes , I agree.
ReplyDeletePpl who are on board other side.. including beloved Annoor party.. it's pitty.. there are going to regret..soon insha Allah.
In Sha Allah
ReplyDeleteThose people who supported this coup, want another Firoun.
ReplyDeleteThanks for the article. We feel a bit relieved.
ReplyDeleteDr Kamal Abdul Naser
aaruthalana article. Alhamdhulillah
ReplyDeleteInna lillahi wainna ilahi raajioon
ReplyDelete