Header Ads



'ஜாதிக ஹெல உறுமயவே அன்று முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசியது'

இராணுவப் புலனாய்வு பிரிவின் அதிகாரியான முத்தலிப் போன்றவர்களை மதிப்பதாகவும் இராணுவத்தில் இருந்த 93 முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர் எனவும் ஆனால் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள எவரும் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யவில்லை எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளை இல்லாதொழிக்கும் தேசிய ஒன்றியம் மகரகம சந்தியில் நடத்திய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்களை வடக்கில் இருந்து விரட்டிய போது, அவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்த போதும், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாப தலைவர் அஸ்ரப் போன்றவர்கள் என்ன செய்தனர்?

குரங்குபாஞ்சானில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை புலிகள் அழித்த போது ஹக்கீம் எங்கிருந்தார்? அவர் பிரபாகரனின் மடியில் இருந்து கொண்டு உடன்படிக்கைகளை செய்து கொண்டார்.

ஜாதிக ஹெல உறுமயவே அன்று முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றி பேசியது. அன்று காட்டுக்கு விறகு வெட்டச் சென்றிருந்த 07 முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர். அவர்களின் சடலங்களை எங்கள் கைகளில் ஏந்தியே புதைத்தோம். ஹக்கீம் போன்றவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

1 comment:

  1. இப்போ என்னதான் செய்யச்சொல்கிறாய் , எங்கட அரசியல் மாமாக்கள் நீண்ட கோமாவில் உள்ளனர் அவர்கள் விழிப்பது சந்தேகம் , ஒன்னப் புடிச்ச கோதாரி எப்ப தீருமோ தெரியல்ல நாசமாப் போங்கடா.

    ReplyDelete

Powered by Blogger.