Header Ads



சுன்னத் செய்யும் கருவிகளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

(Vi) பாகிஸ்தான் பிரஜை ஒருவர் 6 ஆயிரம் மாத்திரைகளுடனும் சுன்னத் செய்வதற்கான உபகணங்களுடனும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் வந்த 37 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையிடமிருந்தே 3 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான குறித்த மாத்திரைகளும் சுன்னத் செய்வதற்கான ஆயிரத்துக்கு மேற்பட்ட கருவிகளும் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாத்திரைகள் மனநோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 
என்பதோடு மாணவர்கள் இதனை கூடுதலாக பயன்படுத்தும் போது ஒருவித போதை ஏற்படுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபருக்கு 10 ஆயிரம் தண்டம் விதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர் இதற்கு முன்னரும் சுங்கப் பிரிவினரால் இவ்வாறான மாத்திரைகளை கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டவர் எனவும் இவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த நாதாரி செஞ்ச வேலையோட தாக்கம் , பொது பல சேனாவோட அடுத்த மீட்டிங்க்ல தெரியவரும்..

    ReplyDelete

Powered by Blogger.