'உடைந்துபோன இதயங்களை சீர்செய்ய தேவையான எல்லாவற்றையும் அரசாங்கம் செய்கிறது'
வெளிநாட்டு அழுத்தங்களினால் வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“தேர்தலை நடத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று அரசாங்கம் உணர்ந்து கொண்டதால் தான், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இது ஜனநாயக நடைமுறைகளின் ஒரு பகுதி. அந்த வழியிலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
வடக்கு மக்களின் உடைந்து போன இதயங்களை சீர் செய்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் அரசாங்கம் செய்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் குறுகிய காலத்தில் மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள சில சிறிலங்கர்கள் நாட்டுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்த ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கண்டியில் ஜனாதிபதி டற்பயிற்சிக் கூடம் ஒன்றையும் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து நமது ஜனாதிபதி சிறுபிள்ளையாட்டம் பொய்சொல்லுவது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது. உடைந்துபோனது இதயங்கள் ஒருபோதும் அவைகளை திருத்தவோ சரிசெய்யவோ ஆறுதல்படுத்தவோ முடியாது. இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய வாழ்வாதாரங்கள் பகிர்ந்தளிக்கபப்டவில்லை அதைத்தானே சுமத்திரன் அவர்கள் சொன்னார்கள் 4 வருடங்களுக்கும் மேலாகின்றது இன்னும் ஆரம்ப நிலையைக்கூட தாண்டவில்லை மாறாக சிப்பாய்களின் அடாவடித்தனமும் ஒடுக்குமுறையும், பாலியல் துஸ்பிரயோகங்களும், கொலைகளும், அத்துமீரல்களும், மிரட்டல்களும் மட்டுமே நடக்கின்றன. தேர்தல் காலங்களை கருத்தில்கொண்டு நல்லபிள்ளையாட்டம் பேசுவது எத்தனைகாலத்திற்கு பொருந்துமோ தெரியவில்லை. இதில் முளுப்பூசணிக்காய் என்னவென்றால் வெளினாடுகளின் அழுத்தத்தினால் வட தேர்தலை நடத்தவில்லை அரசாங்கத்தின் விருப்பத்தினால்தான் நடாத்துகின்றது.
ReplyDelete