Header Ads



முர்ஸியின் ஆட்சி கவிழ்ப்புக்கு காரணம் யார்..?

(அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி)
Cairo,Egypt)

எகிப்தின் இக்வானிய ஆட்சி கவிழ்ப்பில் இஸ்லாமிய கட்சியான ஹிஸ்புன்நூர் கட்சியும் பங்காளி என சில தரப்பு விமர்சித்துவருகின்றனர்.அதன் உண்மை தன்மை என்ன என்பதை காண முன் அக்கட்சி ஆற்றிய மிகப்பெரிய சாதனை என்ன என்பதை இங்கு நாம் காண்போம்.
ஹிஸ்புன்நூர் கட்சியானது சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்ற ஒரே இஸ்லாமிய கட்சி என்ற பெருமையை பெற்ற கட்சியாகும்.அரசியலில் குதித்து சில மாதங்களிலேயே நூற்றுக்கும் அதிகமான ஆசனங்களை பாராளுமன்ற தேர்தலில் பெற்றுகொண்டது.

ஆசனங்கள் அடிப்படையில் இரண்டாவது பெரும் கட்சியாகவும் வாக்குகள் அடிப்படையில் அதிகூடிய மக்கள் செல்வாக்கை பெற்ற ஒரே கட்சி ஹிஸ்புன்நூர் ஆகும்.

நாட்டின் ஸ்தீரதன்மையை கருத்தில் கொண்டு அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும் என்பதை கடந்த ஆறுமாதமாக சாத்வீக முறையிலும் ஆலோசனை முறையிலும் இக்வானிய அரசுக்கு முன்வைத்து வரும் கட்சியில் ஹிஸ்புன்நூர் மிக முக்கிய கட்சியாகும்.

அரச எதிர்ப்பு போராட்டகாரர்களும் இதே கோரிக்கையை வைத்த போதும் அவர்கள் நிலைப்பாடு வேறு ஹிஸ்புன்நூர் கட்சியின் நிலைப்பாடு வேறு என்பதை ஹிஸ்புன்நூர் அரசியல் நகர்வுகளை அவதானிக்கின்றவர்களுக்கு புரியும்.

இக்வானிய அரசில் தமது உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல் பல கசப்பான சம்பவங்களை அனுபவித்த போதும் இக்கட்சி இக்வானிய அரசுக்கு ஆதரவுக்குரலாக பல கட்டங்களில் நின்ருவந்தமை இக்கட்சி நடுநிலைமையை கருத்தில் கொள்ளும் கட்சி என்ற உண்மையை உணர்த்தி வந்தது.இக்கட்சிக்கு வெளியில் உள்ள பல அரசியல் ஆய்வாளர்கள் கூட இக்கட்சியின் அரசியல் முதிர்ச்சியை புகழ்ந்தே வந்தனர்.

எகிப்தின் மிகப்பெரும் இஸ்லாமிய கட்சியான ஹிஸ்புன்நூரின் நடுநிலை சாணக்கிய போக்கினால் தற்போதைய அரசின் போக்கில் ஏற்பட இருந்த தீமைகள் சில குறைக்கபட்டன. முர்சிக்கு எதிரான புரட்சியின் தலைவர்களில் ஒருவரான அல் பாராதயி என்வரை ஜனாதிபதியாக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. ஏலவே முன்னாள் ஜனாதிபதி முர்சி அரசில் வரையப்பட்ட யாப்பை நிரந்தரமாக ரத்து செய்யும் நடவடிக்கை தடுக்கப்பட்டது.

எகிப்தின் இக்வானிய ஆட்சியை வீழ்த்துவதில் காரணமாக அமைந்த தரப்பு யார் என்ற கேள்வி பரவலாக எழுகின்ற ஒன்றே.
ராணுவம் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்ததாக சிலர் பேசிவருகின்றனர்.இராணுவ புரட்சி என்றால் என்ன? இராணுவ புரட்சியின் ஆட்சி எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களே இதை இராணுவ புரட்சி என்று சொல்வர்.

ராணுவம் சிவில் அரசிடமே நாட்டின் தலைமையை ஒப்படைத்துள்ளது.தற்போது எகிப்தை ஆளுபவர் சிவில் ஜனாதிபதியே தவிர ராணுவம் அல்ல.ராணுவம் இவ்வரசில் எந்த ஒரு பங்காளியாகவும் இருக்கமாட்டாது என்றும் தாம் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பிலேயே இருப்போம் என்றும் அறிவித்துள்ளது.

வன்முறைகளை தூண்டும்விதமாக மக்களை உசுப்பேற்றி குழப்பங்களை விளைவிக்காமல் அமைதிவழியில் அரசியல் நகர்வுகளை வைக்கும் பட்சத்தில் தீர்வுகள் குழப்பம் இல்லாமல் கிட்டும்.

ராணுவம் புரட்சி செய்தால் அங்கு சிவில் அதிகாரம் இருக்காது.ராணுவ ஆட்சியில் இராணுவமே நாட்டின் நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எடுக்கும்.இந்த இரண்டு நிலையும் அல்லாத சிவில் அரசிடம் ஆட்சியை ராணுவம் கொடுத்த பின்பும் இராணுவ ஆட்சி என்று சொல்வது பிழையாகும்.

இக்வானிய ஜனாதிபதி அவர்கள் ஆட்சியில் இருந்தவாறே பல தீர்வுகளை கொண்டுவந்திருக்க வேண்டும்.அதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் ஹிஸ்புன்நூர் கட்சியும் இன்னும் சில கட்சிகளும் வைத்தன.ஆனால் இவற்றை இக்வானிய அரசு பதவி போதையில் அலட்சியம் செய்தது.எதிரியை  எப்படி அணுகுவது ஆட்சியை எப்படி தக்கவைப்பது என்ற ஆளுமை அற்ற இக்வான்கள் தமது தவறுகளை மறைக்க அடுத்தவர்களை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எதிரியின் பலத்தை கருத்தில்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியே இன்னுமொரு தேர்தலை அறிவிப்பது தவறா?அவ்வாறு அறிவிக்க கூடாது என்பது அல் குர்ஆன் ஆயத் கூறும் ஹராமான விடயமா

எகிப்திய பாதுகாப்பு தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் ,

ஏற்கனவே பாதுகாப்பு படை அறிவித்த ஒரு வார கால அவகாசம் எந்த முன்னேற்றமும் இன்றி முடிவடைந்த நிலையில் மீண்டும் இரண்டு நாட்கள் சந்தர்பம் வழங்குவதாகவும் இதை பயன் படுத்தி சம்மந்தபட்ட இரு தரப்பினரும் (அரசாங்கமும் ,போராட்டகாரர்களும் ) ஒரு முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, நாட்டின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சந்தர்பம் பயன் படுத்தப்படாதபோது அடுத்து வரும் நாட்களுக்கான அரசியல் வரைபை இராணுவ தலமையகம் வெளியிடும். அதை நடை முறை படுத்துவதற்கு தேவையான அணைத்து நடவடைகைகளையும் இராணுவம் மேற்கொள்ளும் .

மேலும் இந்த நடவடிக்கையில் எந்தொரு தரப்புக்கும் சார்பில்லாமலும் ,இந்த போராட்டத்தில் கலந்துள்ள இளைஞர்களை உள்ளடக்கியதாகவும் அந்த தீர்வு அமையும் என்றும் தனது அறிக்கையில் ராணுவம் அறிவித்திருந்தது.
இந்த அறிக்கை அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும் இருந்தது.
நாட்டின் ஜனாதிபதியே பாத்துகாப்பு படையின் தலைவராக இருக்கும் நிலையியல் ஜனாதிபதி முர்சி உள்வாங்கபடாமல் பாதுகாப்பு அமைச்சின் அவை இந்த அறிக்கையை வெளியிட்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையை ஏலவே அறிந்த ஹிஸ்புன்நூர் ஜனாதிபதி முர்சி அவர்களிடம் பலமாத காலமாக அவசரகால ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியது.ஆனால் இக்வானிய அரசு இதை அலட்சியம் செய்தே வந்தது.ஹிஸ்புன்நூர் கட்சியின் இந்த கோரிக்கை ஆரம்பத்தில் இஸ்லாமிய இயக்கங்களிடம் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தாலும் இறுதிக்கட்டத்தில் சில இஸ்லாமிய கட்சிகள் கூட ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தினர்.

இதில் இக்வானிய முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கலாநிதி ஜமால் ஹிஷ்மத் அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.ஆனாலும் இக்வானிய உயர்பீடம் இந்த கோரிக்கையை செவிமெடுக்க தயாராக இருக்கவில்லை.

எதிர்ப்பு ஆர்பாட்டகார்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி முர்சி அவர்கள் சில நடுநிலை முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கபட்ட விடயங்கள் கூட நடக்கவில்லை.

ஜனாதிபதி முர்சி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியுமா?இல்லையா?என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை முர்சி அறிவிப்பதாக தன்னிடம் கூறினார் என்று எகிப்தின் அரசியல் ஆய்வாளர் பஹ்மி ஹுவைதி என்பவர் கூட கூறி இருந்தார்.அதுகூட நடக்கவில்லை என்பது அரசியல் ஆய்வாளர்களிடம் ஆச்சர்யகுறியை ஏற்படுத்தி நின்றது.

ஆட்சி கவிழ்ப்புக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்புவரை ஜனாதிபதி முர்சி அவர்கள் ராணுவத்துடனான சந்திப்பில் தான் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை அறிவிக்க போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தனது கடைசி உரையில் அவர் அதை செய்யவில்லை என்றும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் சட்ட திட்டங்களில் விட்டுகொடுப்பு உள்ளது நெகிழ்வுத்தன்மை உள்ளது என்று ஏற்றுகொல்கின்றவர்கள் எதற்காக அரசியலில் உள்ள விட்டுகொடுப்பை ஏற்றுகொள்ளவில்லை.இரண்டு தீமைகளில் குறைந்த தீமையை எடுப்பது பற்றிய இஸ்லாமிய உசூல் கலை இவர்களுக்கு தெரியாதா?

நெகிழ்வுத்தன்மை அல்லாத அகீதா சம்மந்தப்பட்ட விடயங்களில் கூட அனுசரிப்பு செய்பவர்கள்,கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றவர்கள் அரசியலில் விட்டுகொடுப்பு என்று ஒன்று உள்ளதை மறந்துவிட்டார்களா? அகீதா விடயம் அடிப்படை அதில் சமரசம் இல்லை என்று தெரிந்தும் அதில் சமரசம் கொண்டார்கள்.அரசியல் என்பது அஹ்லு சுன்னா அறிஞர்களிடம் கிளை விடையமாகும் அது நெகிழும் தன்மை கொண்டது சமரசம் செய்ய முடியுமானது என்று இருந்தும் அதில் அவர்கள் சாதூரியமாகவோ சாத்வீகமாகவோ யோசிக்காமல் அதிரடி பேச்சுகள் எதிரியின் பலம் அறியாத அலட்சியபோக்குகள் என்று எத்தனையோ தவறுகளுக்கு வழிவகுத்துவிட்டனர்.சில இஸ்லாமிய கட்சிகள் சொன்னதற்கு அமைய அவசர தேர்தல் ஒன்றை முர்சி அறிவித்திருந்தால் தற்போதைய பிரச்சினையில் பல பிரச்சினைகளுக்கு ஆட்சியில் இருந்தவரே தீர்வுகள் சொல்லியிருக்க முடியும்.தேர்தலும் நீதமாக நடத்தபட்டிருக்கும்.

தாலிபான்கள் ஐந்துவருடமாக ஆட்சி செய்து அமெரிக்க சூழ்ச்சியில் வீழ்ச்சி கொண்டதை எள்ளி நகையாடிய இக்வான்கள் தமது ஆட்சியை ஒருவருடம் நகர்த்துவதில்கூட படுதோல்வி அடைந்த பரிதாப நிலையில் உள்ளனர்.
தவறுகள் எவ்வாறாயினும் திருந்துவத்தகான வாய்ப்புகள் பல உள்ளன அதில் இந்த சந்தர்பமே மிகப்பெரிய அனுபவ பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எது எப்படியோ ஆட்சி மாற்றம் என்பது எகிப்தில் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. இக்வான்கள் விழுந்த பின்பும் தமது தவறுகளை திருத்திகொள்ளாமல் அடுத்தவர்களின் மீது குற்றத்தை சுமத்தி தப்பிக்க எண்ணுவது தங்கள் ஆட்சியின் வாய்ப்பை நழுவ விட்டதுபோல் தவறுகளில் இருந்து திருந்தும் வாய்ப்பையும் நழுவ விட்டதாகவே கருதப்படும்.
இவர்களின் இந்த அனுபவமற்ற அரசியல் நகர்வு எகிப்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அப்பாவி பொதுமக்களை பலியாடாக்கி ரெத்தம் சிந்தும் புரட்சிக்கு வித்திட்டாமல் பாதுகாக்க அல்லாஹ்வை வேண்டுவோம்.

10 comments:

  1. செம்ம காமிடி...
    சவூதி மன்னனின் முல்லை தின்று வாலாட்டும் கட்சி தான் இந்த ஹிஸ்புன் நூர் கட்சி இது உலகறிந்த விடயம்.
    வக்காளத்து வாங்க வந்துவிட்டார். ரியால் சகோதரர்களின் முனாபின் தனம் வெளியானதை தாங்கி கொள்ள முடியாமல்.

    ReplyDelete
  2. கட்டுரை உண்மையாகவே வரவேற்கத்தக்கது!

    ReplyDelete
  3. நான் நிணைகிறேன்.கட்டுரையாலர் ஓர் தீவிரவாத ஸலஃபி யாக்கும்.சரீயா யாப்பையே இவர்கள் நிராகரித்ததன் நோக்கம் இரானுவத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக அல்லது இவர்கலும் சியொனிஸத்திடம் அடிபணிந்துவிட்டர்கல் என்ரெ தோன்றுகிறது.துறுக்கியில் இஸ்லமிய ஆட்சியை கலைக்க முயட்சித்து மூக்கு உடைந்த இவர்கள் தற்போது எகிப்தில் தற்காலிக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.தாலிபான்கள் அமேரிக்காவால் உருவக்கப்பட்ட அமைப்பு என்பதை கூட இவர் மறந்துவிட்டார் போல

    ReplyDelete
  4. Ahmed Jamshath (An'noori)

    MB or An noor or who ever going with 'Islamic' brand; then it's witness again whole world get-to-gather and try to eliminate.

    Yes, MB's they are not in good shape to handle the crisis from begining;

    When Mursi took office, no parliment, no constituion & no powers to president, and too whole country is bancrupt..economically,politacally and so on...

    Only one year to fix issue of 30 years...

    I like the ending of MB's power , because, other side whole in one side; Surprisingly Anoor party ...too..

    Let see now... how new road map reconcile without 50%of ppl in egypt..

    Again, please don't not jump for conclutions... to early to celebrate...

    MBs are real gainners not losers by this event....

    Thank you again for your article, But, it's prematured enough to rush for conlutions..

    ReplyDelete
  5. என்னால முடியல அம்பட்டையும் வாசிக்க...

    ReplyDelete
  6. முர்சி ஆட்சி அமைத்து சில நாட்களில் ஒரு சகோதரர் சொன்னார் துருக்கியைப் போல முர்சியால் எகிப்தில் ஆட்சி செய்ய முடியாது. அதற்கு சவூதி அரசு விடாது. சவூதி அரசு அந்தப் பணியை சலபிகள் மூலம் கச்சிதமாக செய்சிடும் என்றார். அன்று நான் நம்பல்ல. இப்ப நான் நம்புறேன்.

    ReplyDelete
  7. கட்டுரையி்ல் ”ஆட்சிகவிழிந்தது மிக்க மகிழச்சி” என்ற தோரணையில் அமைந்துள்ளது! இது இஹ்வான்கள் மீதுள்ள கோபத்திலா அல்லது இஸ்லாமிய ஆட்சியொன்றை விரும்பாததனாலா?

    ReplyDelete
  8. நூறு வீதம் ஜனநாயக முறை மூலம் தெரிவு செய்யப்பட்ட எகிப்தின் ஜனாதிபதியை ஒரு வெறும் 48 மணிநேர காலக்கெடுவோடு இராணுவ சதியின் ஒரு வடிவமாக இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் அகற்றியிருக்கிறார்கள்.

    ஹூஸ்னி முபாறக்கின் 30 வருட கால கொடுங்கோல் ஆட்சியின் பின்னர் எகிப்தில் இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்ட ஜனநாயக மறுமலர்ச்சி ஒன்றினை எதிர்பார்த்திருந்த எகிப்திய மற்றும் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பேரதிர்சிசயாக இது மாறியிருக்கிறது.

    இந்த சதி முயற்சிக்கு இஸ்லாத்தை தூய வடிவில் அமுல்படுத்தப்போவதாக சொல்லிக் கொள்ளும் எகிப்தின் சலபி சிந்தனை சார்ந்த அந்நூர் கட்சியானது துணை போயிருப்பது நீதியான ஆட்சியை விரும்பும் அனைத்து முஸ்லிம்களையும் கவலையும் விரக்தியும் கொள்ளச் செய்திருக்கிறது.

    முர்சி ஜனாதிபதியாக தொடர்ந்தும் நிலைத்தால் இஹ்வான்களின் அத்திவாரம் எகிப்தில் இன்னும் இறுக்கமாக மாறிவிடும் என்ற இயக்கக் குரோதங்கள் காரணமாக மாத்திரமே அந்நூர் கட்சியானது இஸ்லாமிய ஆட்சிக் கெதிரான சதிக்கு துணை போய் இருக்கிறது.

    தூய்மையான இஸ்லாம் பேசும் இவர்களின் உண்மையான மனோ நிலை அம்பலமாகியிருக்கும் நிலையில் அதனை தன் பங்கிற்கு சரி செய்யும் முயற்சியாகவே கட்டுரையாளர் இந்த ஆக்கத்தில் கடும் முயற்சி செய்திருக்கிறார்.

    முர்சி ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்திலேயே புதிய தேர்தலை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்நூர் கட்சி முன் வைத்ததாகவும் இந்தக்கட்டுரையாளர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

    இதிலிருந்து தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய முர்சி எதிர்ப்பாளர்களினதும் ஹூஸ்னி முபாறக்கின் ஆதரவான இராணுவ தலைவர்களினதும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதாகவே அந்நூர் கட்சியின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதனையும் இந்தக் கட்டுரையாளரின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
    எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் ஜனாதிபதி என்பவர் சாதாரன பெரும்பாண்மை ஆதரவுடனையே தெரிவு செய்யப்படுகிறார்.

    தெரிவு செய்யப்படும் அந்த ஜனாதிபதிக்கு 45 வீதம் வரையான மக்கள் எதிராகவே வாக்களித்திருப்பார்கள் முர்சியின் விடயத்திலும் இதுதான் நடந்தது.

    ஏறத்தாள 48 வீதமான மக்கள் முர்சிக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். இவர்கள்தான் முர்சி ஆட்சிக்கு வந்த ஒருசில மாதத்திலிருந்தே அவரை பதவியிலிருந்து இறக்கவேண்டும் எனப் போராட்டங்களில் இறங்கினார்கள். கனிசமான மக்களின் விருப்பம் இப்படி அமைந்தாலும் பெரும்பாண்மை மக்களின் ஆணைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் சட்ட பூர்வமாக தனக்கு மக்கள் ஆணை மூலம் கிடைத்திருக்கும் பதவிக்காலத்தை பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதே ஜனநாயகமும் தர்மமும் ஆகும்.

    உலகம் முழுக்க ஆட்சியில் இருக்கும் அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக ஆங்காங்கு மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அங்கு ஒவ்வொரு வருடமும் தேர்தல்கள் நடாத்துவது கிடையாது. இந்நிலையில் முர்சி மாத்திரம்தான் தெரிவு செய்யப்பட்டு ஆறு மாதத்திற்குள்ளாகவே மற்றுமொரு தேர்தலை நடாத்த வேண்டும் என அந்நூர் கட்சி கோரியதானது எப்படி நியாயமாகும்.? இதனை சரியென எப்படி இந்தக்கட்டுரையாளரால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.
    அப்படி அவசர அவசரமாக மற்றுமொரு தேர்தலை நடாத்தியே ஆக வேண்டும் என்கின்ற அளவிற்கு முர்சி செய்த துரோகம் அல்லது பாவம்தான் என்ன..?

    இது பற்றிய விளக்கங்கள் எதனையும் சொல்லாமலேயே இக்கட்டுரையாளர் நழுவிக்கொண்டிருக்கிறார்.
    ஏறத்தாள இராணுவ சதி என்று கூறும் அளவிற்கு நடாத்தி முடிக்கப்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முர்சியும் அவரது நெருங்கிய சகாக்களும் அத்தோடு இஹ்வான்களின் அதியுர் தலைவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இவர்களின் அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. எகிப்தின் உண்மையான மக்களின் உணர்வுகளை சொல்ல விழைந்த ஊடகங்களும், இஸ்லாமியப் பிரச்சாரங்களை மேற் கொள்ளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த அதர்மங்களுக்கொல்லாம் ஒத்துழைப்பாக அந்நூ; கட்சியினால் எப்படி செயற்பட முடிந்தது.
    இந்த அதர்மங்களை இராணுவமே முன்னின்று நடாத்திக் கொண்டு முழுநாட்டையும் தன் கட்டுப்பாபட்டில் வைத்திருக்கின்ற நிலையில் எகிப்தில் சிவில் நிர்வாகமே நடக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இந்தக் கட்டுரையாளரின் மனச்சாட்சி எப்படி இடம் கொடுத்தது.


    ReplyDelete
  9. எங்கள் ஊரில் நடந்த ஒரு உதாரணத்தை இங்கு சொல்வது பொறுத்தமானது என நினைக்கிறேன். எங்கள் ஊர் மிகவூம் பழமை விரும்பிகளின் பிரதேசம். ஒவடவொரு வருடமும் தவறாது புறுதா கந்துரி கொடுப்பார்கள். மிக நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாயம் அல்லது பித்அதத் ஆனால் நாளுக்கு நாள் அத தேய்ந்து இன்றௌ நாளையோ இல்லாமலாகிவிடும் என்றொரு நிலை காணப்பட்டது. யாரும் கந்துரி பிழை என்றே பித்அத் என்றே பள்ளிவாயலில் பயான் செய்யதாக நாம் அறியவில்லை.
    நாளுக்கு நாள் ஏற்பட்ட அறிவியல் மறுமலர்ச்சி காரணமாக அது தேவையில்லை என்ற உணர்வ மக்கள் மத்தியில் ஏற்பட்டமையே காரணமாகும். இன்னும் ஓரிரு வருடங்களில் அது முற்றாக இல்லாமலாகி விடும் ஒரு நிலை காணப்பட்டது.
    இந்த நிலையில் சலபிக்கருத்துக்களால் கவரப்பட்ட ஒரு சிலர் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் கந்துரி தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அது சமப்ந்தமாக மிக காரசாரமாக ஒரு துண்டும் பிரசுரம ஒன்றினை வெளியிட்டனர்.
    சும்ம கிடந்த சங்கை ஊதிக் கெடுததான் என்று சொல்வார்கள். எப்ப துண்டும் பிரசுரம் வெளியிட்டர்களோ அடுநாளே ஊரில் இருந்து காவாலிப்பயல்கள் பாதை முழுக்க பச்சை தோரணம் அமைத்து அழிந்து போய்க்கொண்டிருந்த கந்துரியை மிகவூம் விமர்சையாக நடத்தினார்கள். இப்ப ஒவ்வொரு வருடமும் பச்சை தோரணம் அமைப்பதும் பெனர் போடுவதும் கந்துரியின் வழக்கமாகி விட்டது.இதுதான் சலபியின் டிப்லொமசி.
    இவங்க சொல்லுற மாதரி ஆட்சி செய்சா எப்படி இருக்கும். இப்பவே இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் நயவஞ்கர்களுக்கும் துணைபோயிருக்கிறாங்க. நாளை இயக்க வெறிக்காக எதைத்தான் செய்யாம இரப்பாங்க?

    ReplyDelete
  10. Dear rh...

    You are so right.. having said a very simple example, you taught very good lesson. MB's at least one year.. If noor party begins ruling,, this military would have given the ultimatum 48 hours from first day itself. At least IF this noor party has common sense that When MB supported as Government on behalf Salafs & Mb of syrian opposition to pressure Assaad regime; Noor should have protected the MB's government.. But, They supported the MUBARAK'S remnants.
    & supported to overthrow MB president.. It's showing. Noor is prematured Baby ; or may be 'Still Birth' in Egypt Politics.

    ReplyDelete

Powered by Blogger.