கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவருகிறது முஸ்லிம் காங்கிரஸ்
(ஏ.எல்.ஜனூவர்)
கிழக்கு மாகாண சபையின் ஜூலை மாதத்திற்கான அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி கூடும்போது 13ஆவது அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் (சபை அமர்வு) கூடி இது குறித்து முடிவெடுப்பார்கள் என்று மாகாண சபையின் எதிர்க் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை குழுவின் தலைவருமான சி. தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மேலும், 13ஆவது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக கொண்டு வர இருக்கும் பிரேரணைக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வாக்களிப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்க்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணையொன்றினை கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த பிரேரணையை விரைவில் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக மு.கா. பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.
13ஆவது அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது சிறுபான்மையினரின் நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ளதைக் கருத்திற் கொண்டு மு.கா. இப்பிரேரணையை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள அதியுயர்பீடக் கூட்டத்தின்போது இது குறித்து, இறுதித் தீர்மானம் எட்டப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
மு.கா.வைக் கொண்டு 13ஆவது திருத்தத்துக்கு எதிரான பிரேரணையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுமென்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. ஆகிய கட்சிகள் இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமென்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
.jpg)
kattayam members belty adippanuhal, thalavai phone off panna pattirukkum.or welinaatil iruppar, secretary gummundu irundu wittu marunaal visaranai enru arikkai varum, thavisaalar arasukku aatharavaaha vakkalikka cholvaar.idhu therindha seithi
ReplyDeletewell, sariya sonneenga siddeek
ReplyDeleteவெறும் வீர பேச்சு....தீர்மானம் சபைக்கு வர முன்னரேயே ஜனாதிபதி கண்டிக்கு அழைத்து எல்லாவற்றுக்கும் ஆப்பு வைத்து விட்டார்....வாகன பெர்மிட் அல்லது சுங்க தீர்வையற்ற வாகன அன்பளிப்பு .....நமது பிரதிநிதிகள் நாக்கை தொங்கபோட்டு ....வாகன கனவு ....எல்லாமே புஸ்வானமாகும்
ReplyDeleteநமது அரசியல்வாதிகள் குறவன் வளர்த்த குரங்குகள்தானே. ஏற்கெனவே திவிநெகும வெற்றிக்காக வாக்களிக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் காத்துக் கிடக்கின்றன. அதனைக் காட்டி “போடு ராமா, போடு ராமா” என்று சொன்னால் 13 திருத்த எதிர்ப்புக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். குரங்குக்குத் தேவையானதைக் கொடுத்தால் அது குட்டிக்கரணம் அடித்துவிட்டுப்போகிறது. அது மரத்தைப் பற்றியா யோசிக்கும்?
ReplyDeletePlease eat well and sleep and be ready to get President's gift as you had requested at Kandy meeting.
ReplyDeleteNow, can you remind it what are those?
Vehicle
Salary + Salary arias
Exra payment.
Foreign Traval etc...
then forget all community sir
Siddeek vaayila seeni podanum
ReplyDelete