Header Ads



மகியங்கனையில் பள்ளிவாசல் மீது தக்குதல் - பள்ளிக்குள் பன்றியும் வெட்டப்பட்டது


மகியங்கனை நகரில் உள்ள மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று தராவிஹ் தொழுகையின் பின்னர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வேளை பள்ளிவாசலுக்குள் உட்புகுந்த காடையர் குழு அங்கிருந்தவர்கள் மீது மிளகாய் தூள் வீசியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பள்ளிவாசல் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில நிமிடங்களிலேயே காடையர்கூட்டம் அவ்விடத்தைவிட்டுச் சென்றுள்ளது.

பின்னர் பள்ளிவாசலுக்குள் மறைந்திருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, பள்ளிவாசல் உட்பகுதியில் பன்றி ஒன்று வெட்டப்பட்டு, அதன் பகுதிகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.

உடனடியாகவே பள்ளவாசல் சுத்தப்படுத்தப்பட்டு, இன்று அதிகாலை சுபஹு தொழுகையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.