காத்தான்குடி பள்ளிவாயல்கள், கதீப்மார், முஅல்லிம்கள், சம்மேளனத்தின் கண்டனம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபாப் பள்ளிவாசல் மீது கடந்த 11.07.2013ம் திகதியன்று இனந்தெரியாத இனவாதிகள்; இரவு நேர தராவீஹ் தொழுகை முடிந்ததன் பின்பு மேற்கொண்ட இனவாதச் செயலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் முஅல்லிம்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது என காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் முஅல்லிம்கள் சம்மேளனத் தலைவர் ஏ.எல்.ஆதம்பாவா (பலாஹி) அதன் செயலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா(பலாஹி) ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் அமைதியும் சமாதானமும் சகவாழ்வும் நிலவி சகல இன மக்களும் காலாகாலமாக நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தனர்.
பின்னர் சிறிது காலம் பாசிசப் புலிகளினால் தொடரப்பட்ட யுத்தத்தினால் மக்கள் பெரும் பேரழிவையும் இன்னலையும் எதிர்நோக்கினர்.
அதன்பின்பு எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வைத்து இந்தப் புலிப் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவி வருகிறது.
மூவின மக்களும் சமாதானமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நல்ல அமைதியான சூழல்,சமாதானம் ஒற்றுமை என்பவற்றைக் குழப்பி சமூகங்களுக்கிடையில் இன முறுகலை ஏற்படுத்தி அதில் குளிர் காய முயலும் சதிகார இனவாதிகளை எமது சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது.
மதங்களை பின்பற்றும் உரிமை இந்த நாட்டில் சகல இன மக்களுடையவும் உரிமையாகும்.பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் மக்கள் ஒற்றுமையோடு வாழும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் சமய கலாசார விழுமியங்களை தாக்கியும் கொச்சைப்படுத்தியும் வருவதானது இந்த நாட்டுக்கு நல்லதல்ல.இஸ்லாம் ஒரு மனிதனின் பூரன வாழ்க்கையை எல்லா மதத்திற்கும் பொருத்தமான கருத்துக்களையும் போதனைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றது.
அமைதியாக இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றி வரும் முஸ்லிம்களுக்கு மத்தியில் அருவருப்பான முறையில் ஒரு சில பேரினவாதச் சக்திகள் நடந்து கொள்வதானது நல்லதல்ல.
சகல இன மக்களும் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமையுண்டு என்ற காரணத்தினால் அவர்களின் நிம்மதி குழைக்கப்படுவதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
மாற்றுமதத்தவர்களுக்கு வணக்கஸ்தலங்கள் இருப்பதைப் போன்று முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் அல்லாஹ்வுக்குரியவையாகும்.இந்த இடங்களை யாரும் அசிங்கப்படுத்தப்படுத்தக் கூடாது.இவ்வாறு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் முஅல்லிம்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

உங்களின் நடவடிக்கை பாராட்டப்படவேண்டியதே!அலவாங்கை விழுங்கி விட்டவர்கள் போல் எமது ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் உலமா சபையினர் ,அரசியல் வாதிகளுக்கு மத்தியில் நீங்களாவது முன் வந்து ஒரு கண்டன அறிக்கையை உத்தியோக பூர்வமாக வெளியிட்டிருக்கின்றீர்களே அந்தளவில் உங்களை பாராட்டத்தான் வேண்டும் , அனால் நீங்கள் கூறும் சமாதானத்தை இந் நாட்டில் நிலைநாட்டிய ஜனாதிபதி இவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுத்து நீதியை நிலை நாட்டி,எதிர்காலத்தில் இந்த நாடு மீண்டும் ஒரு முறை கொளைக்கலாமாக மாறுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதில் குறிப்பிட உங்களுக்கும் ----- நடுக்கமா ?
ReplyDelete