Header Ads



பெண்கள் பிரசவ வலியால் துடித்து சத்தமிட்டால் அபராதம்

உலக நாடுகளில் நிலவிவரும் லஞ்சம் ஊழல் தொடர்பான தகவல்களை ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து சமீபத்தில் முடிவுகளை அறிவித்தது.

இந்தியாவைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளிலும் லஞ்சம் தலைவிரித்து கோரத்தாண்டவம் ஆடுவது அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

தனிநபர் வருமானத்தில் மிகவும்  பின்தங்கிய நிலையில் உள்ள ஜிம்பாப்வேயில் தொட்டதற்கு எல்லாம் லஞ்சம் என்ற காலம் போய் பிரசவ வலியால் கத்தினால் கூட லஞ்சம் தரவேண்டும் என்பது பலருக்கு அதிர்ச்சி தகவலாக இருக்கும்.

போலீஸ் துறைக்கு அடுத்தபடியாக லஞ்ச ஊழல் மலிந்த துறையாக 68 சதவீத ஜிம்பாப்வே மக்கள் மருத்துவ துறையை குறிப்பிடுகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்கள் பிரசவ வலியால் துடித்து சத்தமிட்டால், ஒவ்வொரு முறை கத்தும் போதும் ரூ. 300 அபராதமாக விதிக்கப்படுகிறது.

5 முறை கத்தினால் ரூ. 1,500 அபராதம் கட்டியே ஆக வேண்டும்.

போலி வலியால் சிலர் கூச்சலிட்டு  நாடகமாடாமல் இருப்பதை தடுக்கவே இந்த அபராதம் என ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறுகிறது.

அபராத தொகையை கட்ட தவறிய பெண்கள் ஆஸ்பத்திரியிலேயே சிறை வைக்கப்படுகிறார்கள். வட்டியுடன் சேர்த்து அபராதத்தை கட்டிய பின்னரே தாயையும், சேயையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்பது ஜிம்பாப்வே ஆஸ்பத்திரிகளின் எழுதப்பட்ட சட்டமாக உள்ளது என அந்த ஆய்வறிக்கை வேதனை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.