Header Ads



வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகளிடம் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளிடமிருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பீ மூன்றாம் இலக்க சிறைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இந்த கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜீ.பீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர எட்டு சிம் அட்டைகள் 2600 ரூபா பணம் மற்றும் கேரள கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். nf

No comments

Powered by Blogger.