Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜா

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலின் வேட்பாளர் தெரிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையில் நடைபெற்றது. 

இதன்போது, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனதிராசாவை நிறுத்துவதற்கு யாழ். கிளை தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு பதிவுத் தபால் மூலம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் அனைத்து கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயலாற்றக் கூடியவர் என்ற ரீதியிலும் வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கின்றது என்ற வகையிலும் மாவை சேனாதிராசாவை தெரிவு செய்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Tm)

1 comment:

  1. மிகப் பொருத்தமான வேட்பாளர். வாழ்த்துக்கள் மாவை அவர்களே..!

    வடக்கு முஸ்லிம்களையும் நீங்கள் கட்டியணைத்து விடுதலைப் புலிகள் காலத்தில் விளைந்த வரலாற்றுத்தவறைத் துடைத்தெறிய திடசங்கற்பம் கொள்ளுங்கள்!

    இறைவன் அருளாலும், வடபுல தமிழ்பேசும் முஸ்லிம் உறவுகளின் பேராதரவாலும் நீங்கள் முதலாவது வட மாகாண முதல்வராக அரியாசனம் ஏறுவீர்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.