Header Ads



சவுதிக்கு தொழிலுக்குச் செல்லும் பெண்களை 'வீட்டுப் பணிப்பெண்' என அழைக்காதீர்

(Nf) சவுதி அரேபியாவில் தொழிலுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களின் தொழில் நாமத்தை மாற்றுவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய தற்போது வீட்டுப் பணிப்பெண் என அறிவிக்கப்படும் தொழில் நாமத்தை வீட்டு நிர்வாக உதவியாளர் என மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அதிக சம்பளத்தை பெற்றுக்கொடுக்கவும் எண்ணியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில் நிபுணத்துவ தேர்வில் சித்தியடையும் பெண்கள் மாத்திரமே எதிர்காலத்தில் வீட்டு நிர்வாக உதவியாளர் சேவைக்காக சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

3 comments:

  1. கத்தாமா வேலைக்கு போறவங்கள கத்தாமா என்று அழைக்காமல் வேறு என்ன எண்டு அழைப்பதாம்....? இங்க வந்தா நர்சின்க் ஹோம்லையா வேல செய்ய போறாங்க..... வீட்டு வேலைதானே.... பிறகு....?

    ReplyDelete
  2. adimaihal idu nalla payarthane

    ReplyDelete
  3. எஜமாட்டி என்றாவது பெயரை மாற்றிக் கொள்ளுங்க. அங்கு மாட்டுக்குமாதிரி வேலைதான். மானமுள்ள எப்பெண்ணும் வெளிநாடொன்றில் தனித்து தொழில் செய்வாளா? மானம் கெட்ட, மரியாதை அற்றவர்களாலன்றி நடக்கவே முடியாது

    ReplyDelete

Powered by Blogger.