Header Ads



அக்குறணையில் இளைஞர், யுவதிகளுக்காக தொழிற் சந்தை

(J.M.Hafeez and Mohamed Asik)

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழிற் சந்தைகள் மூலம் அரசு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வேலைவாய்ப்புச் சந்தை (2013 07 19) பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச மற்றும் தனியார் துறையில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் தேவையான அடிப்படைப் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளவும் இத் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற் சந்தை மூலம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நன்கு பயனுள்ள வகையில் இளைஞர் யுவதிகள் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர் மேலும்  தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.