'தமிழ் இனவாதம்' - நிலாவெளியில் முஸ்லிம் மாணவிகள் மீது உரிமை மறுப்பு
திருகோணமலை மாவட்டம் நிலாவெளி 9ம் கட்டை பிரதேசத்தில் உள்ள தமிழ் மகாவித்தியாலயத்தில் இன்று 03-07-2013 காலை முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கிய அசௌகரியம் தேசிய ஐக்கிய முன்னணி பொது செயலாளர் அஸாத் சாலியின் தலையீட்டால் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது.
இன்று காலை இந்தப் பாடசாலையின் முஸ்லிம் மாணவிகள் வழமைபோல் தமது கலாசார மரபுடன் கூடிய பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வருகை தந்தபோது முற்றிலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் பாடசாலை அதிபர் அவர்களை பாடசாலையை விட்டு வெளியேற்றி பாடசாலை நுழைவாயிலையும் மூடிவிட்டதாக அஸாத் சாலிக்கு அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் கலாசார சீருடையுடன் மாணவிகள் இந்தப் பாடசாலைக்குள் இனிமேல் பிரவேசிக்க முடியாது என்று அதிபர் உத்தரவிட்டே அவர்களை பாடசாலையில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
அஸாத் சாலி உடனடியாக செயற்பட்டு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசன்த புஞ்சிநிலமேயுடன் தொடர்பு கொண்டு தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததோடு,மாவட்டப பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் உடனடியாகத் தலையிட்டு முஸ்லிம் மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க வழியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து சுசன்த புஞ்சிநிலமே உடனடியாக செயற்பட்டு சம்பந்தப்பட்ட அதிபரோடு தொடர்பு கொண்டு அவரது செய்கையை வன்மையாகக் கண்டித்ததோடு முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கிய அசளகரியத்துக்கும் தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளார். பின்னர் அவர் அஸாத் சாலியோடு தொடர்பு கொண்டு நிலைமை சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது என்று தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட அதிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவரை இடைநிறுத்த தான் சிபார்சு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட சுசன்த புஞ்சிநிலமேக்கு அஸாத் சாலி முஸ்லிம் சமூகம் சார்பாக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது....
ReplyDeleteஅந்த அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டும்...
இது சிறிய விடயம் அல்ல.... முஸ்லிம் மாகாணசபை ஒன்றில் இவ்வாறு நிகழ்ந்திருப்பது பாரதூரமான ஒன்றாகும்....
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் சட்ட ஒழுங்கினை இந்த அதிபர் மீறி இருக்கிறார்...
மாகாணசபை கல்வி அமைச்சர் எங்கே....!!!!!!
நல்ல வேளை நமது முஸ்லிம் எம்பி அல்லது மந்திரிமாரிடம் அவர்கள் முறை இடவில்லை.
ReplyDeletesariya sonneenka....
ReplyDelete