Header Ads



ஐ போனில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி - சார்ஜ் செய்யும் போது பேசியதால் பரிதாபம்

ஐ போனில் மின்சாரம் தாக்கி, இளம் பெண் பலியானார். சீனாவின், உய்குர் பகுதியைச் சேர்ந்தவர் மா, 23. இவர், சீனாவின் விமான சேவைநிறுவனத்தில் பணிப் பெண்ணாகவேலைசெய்து, பின் ராஜினாமா செய்தவர். மா தன், ஐ போனை, சார்ஜ் செய்வதற்காக, மின் இணைப்புடன் இணைத்திருந்தார். 

அப்போது, அதில் அழைப்பு வரவே, மின் இணைப்பைத் துண்டிக்காமல், அப்படியே பேசினார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்ததில், அதே இடத்திலேயே, இறந்தார்.

இதற்கிடையே, "சம்பந்தப்பட்ட ஐ போன் நிறுவனம், இது குறித்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என, டிவிட்டர் இணையதளத்தில், மாவின் சகோதரி தெரிவித்து உள்ளார். இது குறித்து, வருத்தம் தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், எல்லாவிதமான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், மின்சாரம் பாய்ந்தது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், தெரிவித்து உள்ளது.

No comments

Powered by Blogger.