Header Ads



ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனிய இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள துரா கிராமத்தில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீனிய இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் பாலஸ்தீனிய இளைஞர்கள் திரளாக வந்து இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்கினர். அவர்களைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பாலஸ்தீனிய இளைஞர் இறந்தார். 

அந்த இளைஞர், இஸ்ரேலிய இராணுவத்தினர் வந்த ஜீப்பில் ஏறியபோது சுடப்பட்டார் என்றும், பின்னர் அவர் கீழே விழுந்த போது மற்றொரு ராணுவம் வாகனம் அவர் மீது ஏறிச்சென்றது என்றும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து அந்த பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் அதிகமாக குவிக்கப்பட்டு, பல சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.