நிந்தவூரில் யானைகளின் அட்டகாசம் - விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு
(MOHAMED ISMAIL UMAR ALI)
நிந்தவூர் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட ஐந்துக்கு மேற்பட்ட விவசாய கண்டங்களை ஊடறுத்து தெற்குப்பக்கம் இருந்து களியோடை ஆற்றினைத்தாண்டி, வடக்கே கரைவாகு வட்டை எனும் பிரதேசத்தை நோக்கி நேற்றிரவு மூன்று யானைகள் கதிரும்,காயும், குடலையுமாக உள்ள வயல் காணிகளிநூடாக நெற்பயிர்களை துவம்சம் செய்த வண்ணம் ஊடறுத்து சென்றுள்ளன கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் வரையான வயல் காணிகளிநூடாக இந்த யானைகள் சென்ற பாதையெல்லாம் வயல் காணிகள் சீரழிக்கப்பட்டு,நெற்பயிர்கள் சீரளிக்கபட்டுள்ளன,
ஒவ்வொரு போகமும் யானைகளின் அட்டகாசத்தால் இபிரதேச விவசாயிகளின் காணிகள்,வயல்பிரதேசங்களில் உள்ள தேநீர் கடைகள் ,தென்னந்தோட்டங்கள் என்பன தாக்கப்படுவது வழமையாகிவிட்டது 2,3 மாதங்களாக இப்பிரதேசத்தில் யானைகளின் அடாவடித்தனம் சற்று குறைவாக இருந்தாலம் காலந்தவறிய ,இப்புதிய பிரவேசத்தினையோட்டி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்,
ஏற்கனவே யானைகளின் காவலுக்கு பிரத்தியேகமான ஆட்கள் விவசாயக்குளுக்களால் நியமிக்கப் பட்டிருந்தும் நேற்றிரவு யானைகள் சீனம்பெட்டி எனும் இடத்தினூடாக புதிய பாதை அமைத்து நிந்தவூர் காநிகளினுள் புகுந்துள்ளதாக நிந்தவூர் ,நடுக்குடி நாடி விவச்சயக்கண்டத்தின் வட்ட விதானை ,சுலைமலேப்பை என்பவர் தெரிவித்தார்.
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாய அறுவடை துவங்கியதும் இப்பிரதேச விவசாயிகள் யானையிடம் இருந்து தமது பயிர்களை பாதுகாக்கும் வரை நிம்மதியற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.எனவே அமபாரை மாவட்ட வனஜீவராசிகளுக்கான திணைக்களம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாய அறுவடை காலங்களில் யானைகளினால் விவசாயிகளின் உடைமைகளுக்கு தீங்குகள் ஏற்படாவண்ணம் முக்கிய கவனம் செலுத்தவேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்வதுடன் பிரதேச அரசியல்வாதிகளையும் இது விடயமாக கவனம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றனர்.


Post a Comment