Header Ads



பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எதிரானது

(பைரூஸ்)

13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்குவதானது இலங்கையின் தேசிய பாதுகாப்பு அபிலாசைகளுக்கு எதிரானது என்பதால் அதுபற்றி மேலும் கதைப்பது எவ்விதப் பிரயோசனமுமற்ற செயல் என  கோத்தாபய ராஜபக்ஷ இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தையின்போது இதுபற்றித் தெரிவித்துள்ளதாக ‘ஐலண்ட்’ ஆங்கிலப் பத்திரிகை குறிப்பிடுகிறது.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும், தேவையற்ற பிரச்சினைகள் மட்டுமே ஏற்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அங்கு தெளிவுறுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் இதுபற்றி முன்னரும் பலதடவைகள் தெளிவுறுத்தியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் மேனன், இந்தியா இதுபற்றி சிந்தித்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பிறிதொரு இயந்திரத்தைத் செயற்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேனனுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடாத்தும்போதுகூட மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதானது பல பிரச்சினைகள் எழ வழிவகுக்கும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகரிடம் குறிப்பிட்டிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளதாக அப்பத்திரிகையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

4 comments:

  1. பொலிஸ் அதிகாரம் என்றால் என்ன ? தேசிய பாதுகாப்பு என்றால் என்ன ? போன்ற விடயங்களை இந்த ராஜாபக்ச அன் கோ வுக்கு யாராவது சரியான விளக்கம் கொடுவுங்கோவன்.

    அதிகாரங்கள் சரியாக பகிர்ந்தளிக்கப்படாது விட்டால் தான் நாட்டின் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதையும் எடுத்துக் கூறுங்கள் இந்த பேரினவாதம் பிடித்த ராஜபக்க்ஷ அன் கோ களுக்கு.

    ReplyDelete
  2. போலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எதிரானது ...ஆனால் BBS ஐ உத்தியோகபற்றட்ட போலிஸ் ,இராணுவமாக செயல்பட அனுமதிப்பது ...சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்புக்கு எதிரானது என்பதை எப்போது உணர்வீர்களோ ...????

    ReplyDelete
  3. பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் உமக்கு வழங்கப்பட்டதுதான் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எதிராகப் போய்விட்டது.

    ReplyDelete
  4. ooh brother what happen to firoun and his co

    ReplyDelete

Powered by Blogger.