உரிய நேரத்தில் பாங்கு சொல்லுங்கள் - முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை
இப்தார் நேரத்தின் போது சகல வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒரே நேரத்தில் ‘பாங்கு’, ‘அதான்’ ஒலி, ஒளி பரப்பப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுள்ளது.
ஒவ்வொரு வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்தார் சரியான நேரத்துக்கு கொஞ்சம் முன்னரும் பின்னருமான பாங்கை ஒலி, ஒளிபரப்புவது பற்றி முஸ்லிம் மீடியா போரத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது
சரியான நேரத்தில் பாங்கு ஒலிக்கப்பட வேண்டும். ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். இதுவே சிறப்பான ஏற்பாடாக அமையும். எனவே உரிய நேரத்தில் இந்த ஒலி, ஒளிபரப்புக்களை மேற்கொள்ளுமாறும் முஸ்லிம் மீடியா போரம் கேட்டுள்ளது.
ஊடக நிறுவனங்களுக்கு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
.jpg)
மாஸா அல்லாஹ்! மாஸா அல்லாஹ்! வரவேற்கத்தக்க விடயம்....
ReplyDelete