மட்டக்களப்பில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு
(நஷ்ஹத் அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ்; பிரிவில் காயங்கேணி கடற்கரைப் பகுதியில் 16357 துப்பாக்கி ரவைகள் நேற்று (04.07.2013)கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இரா இந்திரனுக்குக் கிடைத்த தகவலையடுத்து வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித ஜயசுந்தரவின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே இத் துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
காயங்கேணி கடற்கரைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலயே ரீ – 56 துப்பாக்கிக்கு பாவிக்கும் ரவைகள் 15632ம், எம்.பி.எம்.ஜி. துப்பாக்கிக்கு பாவிக்கும் ரவைகள் 725ம் கண்டெடுக்கப்பட்டுள்ளன இவை புலிப் பயங்கரவாதிகளால் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment