மஹியங்களை பள்ளிவாசலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்..!
மஹியங்களை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 650 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்ற பங்கரகமன கிராமத்திற்கு நேற்று செவ்வாய்கிழமை, 16 ஆம் திகதி சென்றுள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் அங்குள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் தகவல்களை திரட்டியுள்ளதாக அறியவருகிறது.
மஹியங்கனையில் கடை வைத்திருக்கும் அல்லது வர்த்தகம் செய்யும் முஸ்லிம்கள் ஏன் பங்கரகமனவுக்கு ஜும்ஆ தொழக் வரக்கூடாதெனவும் அந்த பொலிஸ் அதிகாரிக்ள கேள்வியெழுப்பியுள்ளனர்.
இச்சம்பவங்கள் குறித்து மேலும் அறியவருவதாவது,
மஹியங்கனையில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதலையடுத்து, அப்பிரதேசத்திலிருந்து முஸ்லிம் வர்த்தகர்களை விரட்டியடிக்கும் நோக்குடன் அங்குள்ள பௌத்த சங்கம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது முஸ்லிம்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள சிங்களவர்களின் கடைகளை முஸ்லிம்கிளிடமிருந்து மீளப்பெறும் நோக்குடன் இந்த இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
முஸ்லிம்களிடமிருந்து கடைகளை மீறப்பெறும்போது அந்த கடைகளை தாம் வாங்கிக் கொள்வதாகவும், அல்லது அதிக வாடகைப் பணம் செலுத்துவதாகவும் பௌத்த சங்கம் சார்பில் மஹியங்கனையிலுள்ள சிங்களவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளது.
மஹியங்கனையில் கடை வைத்துள்ள முஸ்லிம்களில் 90 சதவீதமானவர்கள் சிங்கவர்களின் கடைகளை வாடகைக்கு பெற்றுள்ளவர்கள் ஆவர். இவ்வாறான நிலையில் முஸ்லிம்களிடமிருந்து கடைகளை மீள்பெற்றால் அங்குள்ள ஜும்ஆ பள்ளிக்கு முஸ்லிம்கள் தொழச் செல்லமாட்டார்கள். இதை சாட்டாக வைத்து அங்குள்ள முஸ்லிம் வர்த்தகர்களை வெளியேற்றவும், பள்ளிவாசலை அகற்றவும் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவே இந்த இனவாத நடவடிக்கையை நோக்குவதாக ஒரு சகோதரர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
ஏதேனும் காரங்களைக் கூறி மஹியங்களை பள்ளிவாசலில் தொழுகையை நிறுத்தவும், அப்பள்ளிவாசலில் தொழுகின்றவர்களை பங்கரகமன பள்ளிவாசலுக்கு செல்லும்படி கட்டளையிடவுமே பொலிஸ் அதிகாரிகள் பங்கரகமன வந்து பள்ளிவாசல்கள் குறித்து துருவித்துருவி விசாரணை மேற்கொண்டதன் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இவ்வாறான இனவாத செயற்பாடுகள் காரணமாக தாம் நொந்து போயுள்ளதாகவும், இதுபற்றி முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முயன்றுவருதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை முன்னார் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸா மஹியங்களை பஸ் டிப்போவுக்கு அருகில் ''இந்தாருங்கள் பள்ளி கட்டுங்கள்'' எனக்கூறி முஸ்லிம்களுக்கு வழங்கிய காணி தற்போதும் காணப்படுவதாகவும், அந்தக் காணியில் பள்ளிவாசலை கட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சியை பௌத்ததேரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், மர்ஹும் அஷ்ரப், இம்தியாஸ் பாக்கீர் மரைக்கார் ஆகியோர் எவ்வளவும் முயன்றும் அதில் முன்னேற்றம் காணமுடியவில்லை எனவும் அந்த சகோதரர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலைகளுக்கு மத்தியில்தான் மஹியங்கனையில் பொதுபல சேனா ஊர்வலமொன்றுக்கும், பொதுக்கூட்டமொன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் ராஜபக்ச அன் கோ களின் பரிபூரன ஆதரவுடனேயே நடைபெறுகிறது ஏனெனில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு இவர்களின் கையிலேயே உண்டு இவர்களை மீறி ஒன்றும் நடந்தேற முடியாது.
ReplyDeleteஇதிலிந்து மீளுவதாயின் இந்த துவேசம் பிடித்த கூட்டத்தையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் முனாபிக்குகளையும் அதிகாரத்தில் இருந்து இறக்கவேண்டும். இது பொதுமக்களாகிய உங்கள் கையில் உண்டு.
யா அழ்ழாஹ் நீயே எம்மை பாதுகாப்பவன்,உனது வீட்டையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாக்க நீயே போதுமானவன்.உன்னிடமே நாங்கள் மீழுகிறோம்
ReplyDeleteஇனவாதம் உடனடியாக இலங்கையில் நிறுத்தப்படவேண்டும். இதற்கான நடவடிக்கை மகிந்த ராஜபக்ச உடனடியாக எடுக்கவேண்டும். இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை முஸ்லிம்களை சண்டைக்கு இழுக்கவேண்டுமென்ற ஒரே ஒரு காரணம்தான் இந்தப்பயங்கரவாதிகளிடம் உள்ள ஒரே ஒரு கோரிக்கையாகத்தென்படுகின்றது. ஒரு மனிதன் என்ற ரீதியில் அவன் எவ்வளவு பொறுமையுடன் இருக்க முடியும் நாங்கள் உங்களுக்கு அதேவேலைகளை திருப்பிச்செய்தால் உங்களால் தாங்க முடியுமா? முஸ்லிம்கள் எவ்வளவு பொறுமையுடன் இருக்கின்றார்கள் இது அவர்கள் நாகரீகமான நிலையைக்காட்டுகின்றது. முஸ்லிம்கள் பெளத்த்ர்களிடம் என்ன கேட்டார்கள் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் பாட்டிலல்லாவா வாழ்கின்றார்கள் இப்படியிருக்க சில காடையர்கள் கும்பல் ஏன் இதுபோன்ற அனாகரீகமான அசிங்கமான செயல்களைச்செய்யவேண்டும்.
ReplyDeleteதயவு செய்து விசாரிப்பு என்ற பெயரில் என்ன நடந்தது என்பதை ரவூப் ஹக்கீமுக்கு தெரிவுப்படுத்துங்கள் என்ன நடக்கின்றதென்பதைப்பார்க்கலாம். அறிவித்தல் விட்டார்களே அவசரக்கடிதம் அனுப்பினார்களே. அவங்களுக்கும் விடயங்களை எடுத்துச்சொல்லுங்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைப்பார்ப்போம்.
"mahiyangana pallikku achchuruththal"
ReplyDelete-ondukkum yosikka vaanaam. thalaivarmaar ARIKKA uttu vittaarhall. athaikkondu pooi palli suvaril otti vittaal pothum.
meatkondu ethum nadanthaal thalaivarmaar aduthth SAWAALIL paarthukkolwaarhall
nilamai emathu kattuppaattai meeri pokum pothu enna nadanthaalum elloraiyum thaan athu thaakkum. enave Muslim sakotharkal arikkaikali pathivetram seiyum pothu ellorukkum porunthum vakaiyilum elloraiyum aravanaiththu sellum samookaththai paathukaakkum vakaiyilum eluthungkal. emakkul ulla pirivinaiyaal thaan netrukooda BBS solli iruppathu Muslimkal thaane engkalukku thakaval tharukiraarkal endu. please brothers .............
ReplyDeleteThose who follows real religion they never do such act as budda dahama too say do not insult or damage other religion. This act not only muslims destroying budu dahama too.
ReplyDeleteGovernment will not realized the fact on SRI LANKA’S CONSTITUTION so far…. that.
ReplyDeleteThis unlawful group is neglecting our Sri Lankan constitution, why is? that “Violating the minority races on their belives even their cuture, damaging properties and try to start to genocide them … ect…
So it’s very curse for the ruling patry.
Why they are not take into consider in the Parliament argument even a single Sinhala MPs will not help us regarding this issue. All are shutting their mouths.
We know why???????????? First T - finished, Second M. will start. OK. Isn't it?
The small and minute issues were damaged so many lives in Miyanmar, Barma, Bosniya,Herscoviniya, even Sri Lanka.