பௌத்த தேரர்களுக்கு ஒழுக்கக் கோவை தயாராகிறது - பிரதமர் ஜயரத்ன
(JM.HAFEEZ)
ஒரு சில பௌத்த தேரர்கள் செய்யும் முறையற்ற செய்கை காரணமாக முழு பௌத்த சாசனத்திற்குமே இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.
பேராதனை சுபோதாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம் பெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். உடரட்ட அமரபுர நிகாயாவின் சாசன ஜோதிகா நிர்வாக சங்க சபையினால் நான்கு தேரர்களுக்கு பதவி வழங்கள் நிகழ்வு இங்கு இடம்பெற்றது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சில சந்தர்ப்பங்களில் பௌத்த மதகுருமார் தொடர்பாக ஏற்பட்டுவரும் தவறான கருத்துக்களைத் திருத்தும் வகையிலான பல்வேறு பிரேரணைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை நாட்டிலுள்ள சகல விகாரைகளுக்கும் அனுப்பி கருத்துக்களைப் பெறப்படும். பெரும்பாலான பௌத்த தேரர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருப்துடன் ஒரு சிறு பிரிவினர் செய்யும் முறையற்ற செய்கைகள் காரணமாக பௌத்த சாசனத்திற்கே இழுக்கு ஏற்பட்டுவருகிறது. அதனைத் திருத்துவதுடன் 2600 வருடம் பழைமையான புத்த சாசனத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்த பிரேரனைகள் வடிவமைக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பௌத்த துறவிகளால் பௌத்தசாசனம் பாதுகாக்கப்பட்ட போதும் ஒரு சில துறவிகள் மேற்கொள்ளும் விரும்பத் தகாத நடவடிக்கைகள் காரணமாக சமயத்திற்கும் சாசனத்திற்கும் குந்தகம் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. அப்படியான தவறுகளைச் செய்பவர்களை பௌத்த துறவிகள் எனக் கூறுவது தவறென்றே நான் கருதுகிறேன்.
சம்புத்த சாசனம் பிரதிபலிப்பதுடன் அதனைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பவர்களையே கௌரவத்திற்குறிய மகா சங்கத்தினர் என ஏற்றுக் கொள்ள முடியும். பௌத்த துறவியாக வேடம் பூண்டு தவறு செய்பவர்களை பௌத்த சமயத் தேரர்கள் எனக் கருத முடியாது. அவர்கள் துறவிகள் (ஹாமதுறு) அல்ல. அவ்வாறு தவறிழைக்கும் தேரர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம், பொலீஸ் நிலையம் என அலைந்து திரிவது பௌத்தர்களுக்கு இழைக்கும் அபகீர்த்தியாகும்.
எனவே அப்படியானவர்களது காவி உடையை அகற்றி சாதாரண உடையுடன் சட்டத்தின் முன் அவர்களை ஆஜர் படுத்த வேண்டுமென நான் ஒரு முன் யோசனையை அந்த அறிக்கையில் முன்வைத்துள்ளேன். பௌத்தர்கள் என்ற வகையில் பௌத்த சாசனத்திற்காக நாம் சில வேளைகளில் முன் செல்ல வேண்டியுள்ளது. மகாநாக்க தேரர்களுக்கு அல்லது நிர்வாகக் கமிட்டிற்கு நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு பௌத்த சாசனத்திற்கு ஒரு சில சவால்கள் விடுக்கப்பட்டு வருவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவேதான் இந்த முன் பிரேரணை அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல விகாரைகளுக்கும் அது அனுப்பிவைக்கப்பட்டு பௌத்த குருமாரின் அபிப்பிராயங்களைப் பெற்று அதன் பின் அதனை சட்டரீதியாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். புத்தபிரான் இவ்உலகத்தை விட்டும் மறைந்து சொற்ப காலத்திலே இவ்வாறான ஒரு ஒழுக்கக் கோவை ஏற்படுத்தப்பட்டது. அது பௌத்த சமயத்தின் சரியான உட்கருத்தை புரிந்து கொள்ளாததனால் ஏற்பட்ட ஒன்றாகும். இருப்பினும் அது இன்று வரை 2557 வருடங்களாக பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வந்துள்ளது. இன்னும் 2500 ஆண்டுகளுக்கு பௌத்த சாசனத்தைப் பாதுகக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
தற்போது நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட பௌத்த குருமார் இந்நாட்டில் இருந்த போதும் சில கிராமங்களுக்கு இன்னும் பௌத்த குருமார்கள் இல்லை. 175 பன்சலைகளுக்கு (விகாரைகள்) பௌத்த துறவிகள் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த உண்மையாகும். அதிகமான பன்சலைகள் அழுக்கடைந்தும் மாசடைந்தும் காணப்படுகின்றன. இன்று பலர் தமது பிள்ளைகளை பௌத்த துறவிகளாக்கும் தியாகத்திற்கு முன் வருவதில்லை. ஆனால் புத்த பிரானின் போதனைகளைக் கொண்ட புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் போதிளவு பௌத்த குருமாரை நாம் உருவாக்க வேண்டும் என்பதை மறந்து விடவேண்டாம்.
.jpg)
Yes if you need to increase the knowledge of Buddhist philosophy you must increase the thru Buddhism and the knowledge which was preach by the load Buddha. But now days It is using as a racism and the Politics; Also using lies and the hearting speeches against other religion. Because the Monks them self-do not know the proper religion also they are using the religion to get the political advantages.
ReplyDeleteஇதைத்தானே நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகின்றோம். இப்போதாவது புரிந்துள்ளதே சந்தோசம் ஆனால் பேச்சுக்கு மட்டுமல்லாமல் செயலிலும் இருக்குமா? அதுக்காக வயித்துபொழப்பு நடத்துவதற்கு உடையணிந்த அப்பாவி தேரர்களையே சுத்தி சுத்தி வராமல் கலகொட அத்தே ஞானசார போன்ற திருடன்களை கவனியுங்கள்.
ReplyDelete