இயற்கை அனர்த்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்பாகவும்- அவை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று வியாழக்கிழமை கையளித்தது.
காலநிலை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் ஏ.டபிள்யூ.மொஹாட்டால தலைமையில் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதிகளான சீ.ராஜபக்ஷ- ஏ.திஸாநாயக்க ஆகியோர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

Post a Comment