Header Ads

சவூதி அரேபியாவிலிருந்து நாடுதிரும்ப காத்திருக்கும் இலங்கையர்கள்

(Nf) சவுதியில் பொது மன்னிப்பு காலத்தின் கீழ் இலங்கை திரும்பும் எதிர்பார்ப்பில் மேலும் ஏழாயிரம் இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு தம்மை பதிவுசெய்துகொண்ட மூவாயிரம் இலங்கையர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பிரதி இணைப்பதிகாரி மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மூவாயிரம் பணியாளர்களுக்கு அதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ளதாக மங்கள ரன்தெனிய மேலும் கூறியுள்ளார்.

சவுதியில் பொது மன்னிப்பு காலத்தின் கீழ் இலங்கை திரும்பும் எதிர்பார்ப்பில் மேலும் ஏழாயிரம் இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு தம்மை பதிவுசெய்துகொண்ட மூவாயிரம் இலங்கையர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பிரதி இணைப்பதிகாரி மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மூவாயிரம் பணியாளர்களுக்கு அதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ளதாக மங்கள ரன்தெனிய மேலும் கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.