கலைஞர்களின் தேசிய விபரக்கொத்தைத் தயாரிக்க நடவடிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
கலைஞர்களின் பெயர் விபரம் அடங்கிய தேசிய விபரக்கொத்தைத் தயாரிக்க கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான விபகரங்களை திணைக்களம் உரிய கலைஞர்களிடமிருந்து கோரியுள்ளது.
தங்களின் கலைத்துறையில் கடந்த 2 வருடங்களில் குறைந்த பட்சம் 3 படைப்புக்களை படைப்திருப்போர் இத்தேசிய விபரக்கொத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கத் தகைமை பெற்றவர்கள் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திணைக்களத்தினால் டெலிநிசா, சினி, வன்கூங் ஆகிய பெயர்களில் விபரக்கொத்துக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாவும் கலைஞர்கள் தங்களது பெயர், கலைத்துறையில் பயன்படுத்தும் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அவற்றுடன் குறித்த வருடங்களில் தங்களால் படைக்கப்பட்ட படைப்புக்கள் அடங்கிய விண்ணப்பத்தை பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, 'செத்சிறிபாய' பத்தரமுல்லை என்ற முவரிக்கு அனுப்பிவைக்குமாறு திணைக்களம் கலைஞர்களை வேண்டியுள்ளது.
.jpg)
Post a Comment