தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதி..?
(Tl) வடமாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதி நிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் தெரிவு தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையில் பலத்த போட்டியின் மத்தியில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் வேட்பாளர்களின் பங்கீடு தொடர்பாக இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதிநிதியொருவரை யாழ்.மாவட்டத் தேர்தல் களத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

யாரை நம்பினாலும் முனாபிக்குகளை நம்பக்கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை.
ReplyDeleteஅன்று யால்பானத்திலிருந்து முஸ்லீம்களை உடுத்த ஆடையுடன் விரட்டியது யார் என்று முஸ்லிம்களுக்கு நினைவிருந்தால் சரி.
முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களித்து எமது எந்த உரிமைகளை பொற்றுத்தந்தார்கள்,அது தலைவர் அஸ்ரபுடன் போய்விட்டது.இப்போதுள்ளதுகள் ஆளுமையில்லாத,சுயநலவாத,குள்ளநரித்தனமான,தான்தோன்றித்தனமான,முதுகொலும்பில்லாத அறிக்கைமட்டும் விடத்தொரிந்த சாணாக்கியமற்ற தலமைத்துவத்திற்கு ஆசைப்பட்ட தலைகள். எவர் எவருடன் சோர்ந்தாலும்? ........எமதுசமுதாயத்திற்கு தகுதியில்லாத தலமைத்துவம் ஆகிவிட்டதே.
ReplyDeleteஅன்று யாழில் நடந்த அட்டூழியங்களுக்கு உருதுனயனவனுக்கு ஒட்டு போடுவதா முஸ்லிம் பெயரில் முனாபிக் ஒட்டு கேட்டாலும் சரி ஒரு தமிழன் அந்த கட்சியில் ஒட்டு கேட்டாலும் சரி உண்மையான யாழ்ப்பாண முஸ்லிம் ஒருவனால் ஒட்டு போடுவதை ஒரு கணம் நினைத்து கூட பார்க்க முடியாது
ReplyDeleteஎதிரியின் எதிரி எனக்கு நண்பன் ....முஸ்லிம் உரிமைகளை பெற்று தருவதாக வாக்கு பெற்றவர்களே நயவஞ்சக தனமாக நடக்கும்போது கூட்டமைப்பு மூலம் தெரிவாகும் பிரதிநிதி கொள்கையிலயே பற்றுதியுடன் செயல்படுவார் எனின் அது வரவேட்ப்புக்குரியது.
ReplyDeleteif all Muslims Parties had joined the Sinhalease parties who will join with Tamil Parties. it's his rights. No one aurgive on this issue. Tamil Parties have come to Democratic way without killing innocent civilians. We can believe now no hasitation on this matter, beause now they have learned well all and etc...
ReplyDeleteயாழ்ப்பாணத்திலிருந்து ஒரேயொரு முறைதான் உடுத்த உடையுடன் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். அதைச் செய்தது ஆயுதந்தாங்கிய புலிகள்.
ReplyDeleteஅந்த வரலாற்றுத் தவறுக்காக பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே அந்த வரலாற்றுத் தவறை வருத்தம் தெரிவித்தவர்களிடம் இன்னமும் கொட்டித் தீர்த்து வஞ்சனை பாராட்டிக் கொண்டிருப்பது முஸ்லிம்களான நமக்கு அழகல்ல.
காத்தான்குடிப் பள்ளிவாசல்களுக்குள் தொழுது கொண்டிருந்த எமது சகோதரர்களை குண்டெறிந்தும், சுட்டும் கொன்ற கொலைகாரக் கூட்டத்தின் தலைவனையே இன்றைய அரசியல் அதிகாரத்திலுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் அப்பள்ளிவாசலுக்குள் மாலை மரியாதைகளுடன் அழைத்து வந்து அபிவிருத்தி அரசியல் பற்றி கதையளக்கும்போது, வடக்கு முஸ்லிம்கள் வருத்தம் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விசுவாசமாக ஒன்றிணைவதில் என்ன தவறிருக்கின்றது?
இந்த அரசாங்கத்திற்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்து முஸ்லிம் தலைவர்கள் ஊமையாகியிருக்கும்போது இன்று ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு பள்ளிவாசலாக துடைத்துத் துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பேரின பல சேனாக்களைப் பாதுகாத்துப் போஷிக்கின்ற பேரினக் கட்சிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கென்றாலும் வடக்கு முஸ்லிம்கள் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
இன்று முஸ்லிம்களை விரட்டிய புலிகள் வடக்கில் இல்லையென்றாலும், நாளை முஸ்லிம்களை விரட்டியடிப்பதற்கு அரசாங்கத்தின் போஷிப்புடன் பல சோனாக்கள் அங்கு வரத்தான் போகின்றனர்.
புலிகள் வடக்கை விட்டுத்தான் முஸ்லிம்களை விரட்டினார்கள். பல சேனாக்கள் நாட்டை விடடே துரத்துவதற்குப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏற்கனவே நான் கருத்துரைத்தது போல், த.தே.கூட்டமைப்பு அவர்களின் விஞ்ஞாபனத்தில் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், பாதுகாப்பு, இருப்பு, வாழ்வாதரத் தொழிற்பாடுகள் போன்ற அனைத்திற்கும் உத்தரவாதமளித்து அதனை முதலமைச்சர் வேட்பாளரும் அங்கீகரித்து முஸ்லிம்களின் சார்பில் வேட்பாளர்களையும் நியமித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முன்வர வேண்டும்.
தீர்வை வரியற்ற ஆடம்பர வாகன இறக்குமதிக் கோட்டாவுக்கு வாய் பிளக்கும் முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்காது சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும், சமாதான சகவாழ்வுக்காகவும், தேசிய நல்லிணக்கத்திற்காகவும், நல்லாட்சி நிர்வாகத்திற்காகவும் குரல் கொடுக்கக்கூடிய சுயமரியாதையுள்ள முஸ்லிம் புத்திஜீவிகளை கூட்டமைப்பு நம்பிக்கையுடன் உள்வாங்க வேண்டும்.
எவ்வாறு முதலமைச்சர் வேட்பாளரை சர்வதேசத்தின் கவனத்தைக் கவரும் வகையில் கூட்டமைப்பு உள்வாங்கியதோ அவ்வாறே கூட்டமைப்பு நியமிக்கும் முஸ்லிம் வேட்பாளரும் சர்வதேசத்தின் முன் சென்று துணிவுடன் இந்நாட்டிலும், மாகாணத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களினது நிலவரங்களை எடுத்துரைக்கக்கூடிய புலமையாளர்களை உள்வாங்கிக் காட்ட வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் பெரும்பகுதி சிங்களத் தலைமைகளுடன் இணைந்திருக்கின்ற நிலையில் சிறுபகுதி முஸ்லிம்களாவது தமிழ்த் தலைமைகளுடன் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இன்றேல் உதைக்கப்படும் பந்தைத் தடுத்துப் பிடிப்பதற்கு கீப்பர் இல்லாத சமூகமாக இந்நாட்டில் நம் சமூகம் ஆளாகிவிடும்
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-