Header Ads



அரசியல்வாதிகள் ஊழல் மிகுந்தவர்கள் - 51 சதவீதம் இலங்கையர்கள் நம்பிக்கை

உலகில் நான்கில் ஒருவர் கடந்த ஆண்டு லஞ்சம் கொடுக்க வேண்டி வந்துள்ளது என்று உலக அளவில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. உலகில் லஞ்ச சூழ்நிலை மோசமடைந்துவருவதாக பரவலான கருத்து நிலவுவதாகவும் இந்த சுற்றாய்வு கண்டறிந்துள்ளது.

இலங்கையில் 51 சதவீதம் பேரும் அரசியல்வாதிகளை ஊழல் நிறைந்தவர்களாகப் பார்க்கின்றனர் என இந்த ஆய்வு காட்டுகிறது.

கடந்த ஓராண்டில் பொலிசாருக்கு தாங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டி வந்ததாக இலங்கையில் 43 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர் என்று இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

No comments

Powered by Blogger.