Header Ads



புதுமனை புகுவிழா - ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 22)

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை முடித்துப் பார் என்பார்கள். இந்த இரண்டும் உண்மையில் கஷ்டமோ இல்லையோ, ஆனால், இந்த இரண்டின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்கள் தலைவிரித்து ஆடுவதை நாம் கண்டு வருகிறோம்.

ஒரு புதிய வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும் போதும் அல்லது கட்டி முடித்தவுடனும், அதற்காக செய்யப்படும் சடங்கு, சம்பிரதா யங்களினால் இஸ்லாத்தை விட்டு வெளி யேறக் கூடிய அவல நிலையைத்தான் இந்தக் கட்டுரை தெளிவுபடுத்தப் போகிறது. 

இஸ்லாம் மார்க்கம் அழகான மார்க்கம். இனிமையான மார்க்கம். எளிமையான மார்க்கம். வாழ்க்கைக்கு ஏற்ற மார்க்கம். நடைமுறைக்கு சிறந்த மார்க்கம். ஆனால், இந்த மார்க்கத்தை அந்நியர்கள் கேலி செய்யும் மார்க்கமாக நமது மக்கள் அமைத் துக் கொண்டார்கள். 

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றுதான் நாம் வசிக்கும் வீடு. இந்த வீடு சிறியதோ, பெரியதோ, இறை வனுக்குப் பொருத்தமானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். சிறந்த வீடு, சிறந்த மனைவி, சிறந்த வாகனம் இருக்குமேயானால், அவர் பாக்கியசாலிதான். 

ஒரு மனிதன் வீட்டைக் கட்டப் போகிறான் என்றால், அந்த வீட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டுமா? என்றால் இஸ்லாத்தின் பார்வையில் எதுவுமே கிடையாது. ஆனால், இன்று நமது சமுதாயத்தில் சிலர் வீடு கட்டுவதற்கு முன் அந்நிய சடங்கு, சம்பிரதாயங்களை மார்க்கமாக நடைமுறைப் படுத்தி வருவதைக் காணலாம். 

மார்க்கத்தை சரியாக சொல்லிக் கொடுக்கக் கூடிய மார்க்க அறிஞர்களே சில மௌட்டீகங்களை முன்நின்று செய்வது வேதனைக்குரிய விடயம்தான். 

ஒரு வீட்டைக் கட்டுவதற்குமுன் அந்தக் காணியில் பலவிதமான சடங்குகளை செய்து மௌலவியே பாதிஹாவும் ஓதி விடுவார். மேலும் அந்தக் காணியில் வீடு கட்ட ஆரம்பிக்கும்போது முதன் முதலாக இரத்தத்தை அறுத்து ஓட்டுவார்கள். அப்போதுதான் கட்டப்போகும் கட்டிடம் உறுதியாக இருக்குமாம், 

இது அந்நியர்களிடம் எடுக்கப்பட்ட நகல். அதாவது அந்நியர்கள் வெற்றுக் காணியில் வீடு கட்ட ஆரம்பிக்கும்போது ஆட்டையோ, கோழியையோ அறுத்து இரத்த பழி கொடுப்பார்கள். பெரிய கட்டிடங்கள் என்றால் சில போலி சாமியாரின் ஆலோசனையின்படி நரபலியும் கொடுப்பார்கள். அதாவது குடும் பத்தில் பிறந்த மூத்த ஆண் குழந்தையை கடத்திக் கொண்டு வந்து, அறுத்து (நரபலி) கொடுப்பார்கள். 

இது இந்தியாவில் பல இடங்களில் நடந்துள்ளதை நாம் அறிவோம். இப்படி அந்நியர்களின் வழிமுறைகளை அப்படியே காப்பி அடித்து, ஆட்டையோ கோழியையோ அறுத்து பலிகொடுக்கிறார்கள். அல்லது வீடோ, வேறு கட்டிடமோ கட்டுவதற்கு முன் சிறிய தங்கம், வெள்ளித் துண்டுகளை அந்த  இடத்தில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள். இப்படி நடக்கிறது. 

அடுத்ததாக வீடு கட்டி முடிந்தவுடன், வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது எந்த நாளில் வீட்டிற்குக் குடிபோவது? எந்த நேரத்தில் குடிபோவது? என்று சில லெப் பைமார்களிடம் கேட்டு, பால் கிதாபைப் பார்த்து முடிவெடுக்கிறார்கள். அதாவது நல்ல நாள், கெட்ட நாள் பார்க்கிறார்கள். 

நல்ல நாள், கெட்ட நாள் என்பது இஸ்லாத்தில் கிடையாது. அந்நியர்கள் சாஸ்திரம் என்று அழைக்கிறார்கள். நம்மவர்கள் பால் கிதாப் என்று பெயர் வைத்துள்ளார்கள். இரண்டும் சமம்தான். அவர்கள் சாமியார், பூசாரி போன்றோரிடம் செல்கிறார்கள். நம்மவர்கள் மௌலவி லெப்பை போன்றோரிடம் செல்கிறார்கள். 

அவர்கள் கிளி, கழுகு, மைனா போன்ற பறவைகளையும், கை ரேகை, நாடி பிடித் தல், பிறந்த தினத்தை வைத்துப் பார்க் கிறார்கள். நம்மவர்கள் பால் கிதாப் என்ற சில விடயங்களை அறபியில் எழுதி வைத்துப் பார்க்கிறார்கள். இப்போது எங்களுக்கும் முடியும் என்று கேரளத்து மாந்திரீகம் போட்டியாக செயல்படுகிறார்கள். 

எனவே புதிய வீட்டிற்கு எந்த நாளில் போக வேண்டும் என்பதை ஈமானை அடகு வைத்து, இஸ்லாத்தை விட்டு வெளி யேறிய நிலையில், தமது புதிய வீட்டிற்குள் நுழைகிறார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றி யாவது கேட்டால், கேட்டவருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவ தில்லை. (ஆதாரம்: முஸ்லிம்-4488)

மற்றொரு ஹதீஸில் முஹம்மத் கொண்டு வந்த மார்க்கத்தை நிராகரித்தவர் ஆவார் என்று கூறினார்கள். 

எனவே, கெட்ட நாள், நல்ல நாள் பார்ப் பதன் மூலம் பாவமான காரியத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் நல்ல நேரம் தேடுகிறார்கள். அதாவது அந்நியர்கள் நல்ல நேரம் தேடுவதைப் போல் நம்ம வர்களும் அச்சு பிசகாமல் தேடுகிறார்கள். 

இஸ்லாம் சொல்லாத ஒன்றை நாமாக மார்க்கமாக்கிய குற்றத்திற்கு ஆளாகி விடுகிறோம். அதேபோல், புதிய வீட்டிற்குள் செல்லும்போது அந்நியர்கள் முதன் முலில் பசுமாட்டை வீட்டிற்குள் எடுத்துச் சென்று மீண்டும் வெளியே கொண்டு வருவார்கள். இன்று சில இடங்களில் நம்மவர்கள்  அதே போல் மாட்டை புதிய வீட்டிற்குள் இழுத்துச் சென்று வெளியே கொண்டு வருகிறார்கள். அந்நியர்கள் பசு மாட்டை தெய்வமாக நினைத்து வணங்கக் கூடியவர்கள். அத னால் புதிய வீட்டிற்குள் நமது குலமாத வான பசுமாடு செல்ல வேண்டும் என்பது அவர்களது ஐதீகம். ஆனால் நம்மவர்களும் செய்கிறார்கள் என்றால், பசுமாட்டை கடவுளாக எடுத்துக் கொண்டார்களா? ஈமானை இழக்கிறார்களா? இல்லையா? சற்று சிந்தித்துப் பாருங்கள். 

இன்று சில இடங்களில் புதுமனை புகு விழா என்று காட் அடித்து, வீடு வீடாக பங்கு வைத்து திறப்பு விழா அன்று 4444 தடவைகள் ஸலவாத்துன் நாரிய்யா ஓத வேண்டும் என்று சிலரை வைத்து ஓது வதைக் காணலாம்.

இன்னும் சிலர் ஹலரா மஜ்லிஸ் என்ற பெயரில  ராதிப் இப்படி பல விடயங்களை ஓதி வீடு குடி புகுவதைக் காணலாம். இன்னும் சிலர் நடு வீட்டில் பால் பொங்க வைத்து, அந்தப் பாலை அக்கம் பக்கத்தி லுள்ளவர்களுக்குக் கொடுத்து, வீடு குடிபுகுவதைக் காணலாம். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தவறான விடயங்களைச் செய்து, புதிய வீட்டிற்குச் செல்கிறார்கள். 

இன்னும் சிலர் புதிய வீட்டிற்காக பாங்கு சொல்லி வீட்டிற்குச் செல்கிறார்கள். அதே நேரம் வீட்டைக் கட்டும்போதும், வீட்டை கட்டி முடிந்ததும் கண்ணூறு படாமல் இருப்பதற்காக பெரிய, பெரிய பூசணிக்காய் அல்லது பயங்கரமான தோற்றத்தில் சில உருவங்களை தொங்கப் போடுகிறார்கள். இன்னும் சிலர் போத்தல்களில் அடைக்கப் பட்ட இஸ்மு அஸ்மாக்கள் இப்படி இஸ்லாம் காட்டித் தராத அந்நியர்களின் சடங்கு சம்பிரதாயங்களை இஸ்லாமிய மார்க்கம் போன்று செய்கிறார்கள். 

மேற்சுட்டிக் காட்டியவைகள் அனைத்தும் அடிப்படை இஸ்லாத்தில் கிடையாது. நல்லது என்று சிலரால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று மௌலவியின் தலைமையில் மார்க்கமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது என்ற அடிப்படையில் எந்த அமலாக இருந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா அல்லது அனு மதித்துள்ளார்களா? என்பதை கவனித்து நடைமுறைப்படுத்த வேண்டும். 

மீண்டும் வேதாளம் முறுங்கை மரத்தில் ஏறியகதை போல, நாம் மீண்டும் அந்த ஜாஹிலிய்யத்திற்குப் போய் விடக் கூடாது.

கேள்விகள் – 22

கேள்வி – 1 சோதிடனிடம் சென்று அதை உண்மைப் படுத்தினால் அவனின் எத்தனை நாட்கள் தொழுகை ஏற்று கொள்ளப் படமாட்டாது?
கேள்வி – 2 அந்த தூதரிடத்தில் முன்மாதிரி உள்ளது என்று அல்லாஹ் எந்த நபியைப் பற்றி குறிப்பிடுகிறான்?

No comments

Powered by Blogger.