Header Ads



யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பஸ் விபத்து - 20 பயணிகள் காயம் (பாடங்கள்)


(பாறூக்  சிகான்)

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் புங்கன்குளம் சந்தியில் இடம்பெற்ற பஸ் வண்டி விபத்தில் 20 பயணிகள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் (5.7.2013) மதியம் 11.30 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியை இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ் வண்டி முந்திச் செல்ல முயன்றபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத இ.போ. சபை பஸ் தனியார் பஸ்ஸின் பின்பக்கத்தால் சென்று இடித்ததாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்விபத்தின் காரணமாக தனியார் பஸ் மற்றும் இ.போ.சபை பஸ் பகுதியளவில் சேதமடைந்து காணப்பட்டதை காணமுடிந்தது. இவ்விபத்தினால் காயமடைந்த 20 பொதுமக்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ் போக்குவரத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர்.


No comments

Powered by Blogger.