ஆயுர்வேத சிகிச்சையைப் பெறும் உரிமை கல்முனை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதா?
(முனையூரான்)
ஆயுர்வேத சிகிச்சையைப் பெறும் உரிமை கல்முனைக்குடிப் பிரதேச மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதா? இவ்வாறு கல்முனைக்குடிப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து கல்முனைக்குடி பிரதேச மக்கள் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத்திலேயே மிகப்பெறும் பழைமை வாய்ந்த ஆயுர்வேத ைத்தியாலையாக கல்முனைக்குடி சாஹிபு வீதியில் இயங்கிவந்த கல்முனைக்குடி ஆயுர்வேத வைத்தியசாலை, சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவடைந்தது. சுனாமிப் பேரனர்த்தத்தினால் முற்றாக அழிவைடந்த, ஏறக்குறைய 60 வருடம் பழைமை வாய்ந்த இவ்வைத்தியசாலை சுனாமி ஏற்பட்டு ஏறக்குறைய 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இவ்வைத்தியசாலை இதுவைர புனர்நிhமானம் செய்யப்படவில்லை. இவ்வைத்தியசாலையை புனர்நிர்மானம் செய்யும் அக்கறை எந்தவொரு மக்கள் பிரதிநிக்கும் கிஞ்சியளவும் கிடையாது என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஆயுள்வேத வைத்தியத்துறையில் பட்டம் பெற்ற, கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர்கள் இப்பிரதேசத்தில் இருந்தும,; அவர்களின் சேவையை இப்பிரதேச மக்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இவ்வைத்தியசாலை புனரமைக்கப்படாமல் இருப்பதனால் கைநழுவிப்போயுள்ளது.
தேர்தல் காலங்களில் கல்முனைக்குடி மக்களின் வாக்குகளை பெற காலடியில் வந்து தவம் கிடக்கும் இப்பேர்வழிகள் மக்களின் முக்கிய தேவைகள் எவை? அவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் எவை? என்பது பற்றிச் சிந்திக்காது தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவும் அரசியல் வங்குரோத்து நிலையை தவிர்த்துக்கொள்வதற்காகவும் போட்டி போட்டு எவ்வித பிரயோசனமுமற்ற அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றனர். அபிவிருத்திப் பணிகளுக்காக அடிக்கல் நடுவதும் பின்னர் அவற்றறைப் பிடுங்கி எறிவதும் என்ற யாhத்தத்தையே கடந்த 13 வருடங்களாக இவ்வூர்மக்கள்; காணும் காட்சிகளாக உள்ளன என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரதேச உள்ளுர் வீதிகள் போக்குவரத்துப் பண்ணமுடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளன. பிரதேச பாடசாலைகள் பல்வேறு தேவைகளை நாடி நிற்கின்றன. கல்முனைப் பொது நூலகம் கவனிப்பாறற்ற நிலையில் உள்ளது. சுனாமியனால் பாதிக்கப்ட்டவர்கள் இன்னும் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாது ஏங்கி நிற்கின்றனர். 1983ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் இன்னுமே கட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு எத்தனையோ முக்கிய தேவைகள் இப்பிரதேசத்தில் தேங்கிக்கிடக்க, தேவையற்ற அபிவிருத்திப் பணிகளுக்கு மக்களின் பணம் விரையம் செய்யபடுவது வேதனையளிப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்களின் முக்கிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமெனக் கோரம் கல்முனைக்குடி மக்கள,; கல்முனைக்குடி ஆயுள்வேத வைத்தியசாலையை புனரமைப்புச் செய்து இப்பிரதேச மக்கள் ஆயுள்வேத சிகிச்சையைப் பெறும் உரிமையைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுகின்றனர்.

Post a Comment