முஸ்லிம் சகோதரர் மீது சிங்கள ராவய தாக்குதல் (படங்கள்)
கதறகம இலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை மாடு அறுப்பு மற்றும் மத மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 15-06-2013 அன்று ஆரம்பித்த சிங்கள ராவய இன் பாத யாத்திரையை இன்று 19-06-2013 காலை தளல்ல (மாத்தறை மாவட்டம்) எனும் இடத்தில் இருந்து ஆரம்பித்தது. கந்தர எனும் இடத்தில் பாதுகாப்பு வழங்க வந்த அப்பிரதேச போலீசார், அவர்கள் சார்பாக அப்பாத யாத்திரையை போட்டோ பிடிக்கும் படியும், தாம் அதற்கு முழு பாதுகாப்பு வழங்குவதாகவும் ஒரு முஸ்லிம் படபிடிப்பாளரிடம் கூறியுள்ளனர்.
கந்தர பிரதேசத்தை அடைந்த சிங்கள ராவய, அப்படபிடிப்பளரை அடித்து, அவரின் கமரா மற்றும் அடையாள அட்டையை பறித்துள்ளனர். இதுபற்றி அவர் போலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இப்பாத யாத்திரை செல்வோரல் நேற்று தங்கல்லையில் வைத்து முஸ்லிம் வியாபாரி ஒருவரின் இறைச்சிக்கடை தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


intha paiththiyakaaranukalin seithikalukku munnnurimai odukkaamal, antha camera man patthi mattu news podunga
ReplyDeleterawaya modayo apith kiyanne mash kadae wahandakiyala habai wadipurakannae kawda?
ReplyDeletefirst of all we must be pray and want to ask thawba and follow the Islam. there after these many problems will leave from Muslims. We will try give the benefits to Allah from our behaviors. thankyou. salaam.
ReplyDelete