இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க
(Tm) இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மேஜர் ஜெனரல் பதவிநிலை வகிக்கும் தயா ரத்நாயக்கா, லெப்டினன் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment