பௌத்த பிக்குவின் பொருட்களை திருடிய ஞானசார தேரர்
(கலைமகன் பைரூஸ்)
தனது அறைக்குள் நுழைந்து கைப்பற்றிய பொருட்களை தமக்குத் திருப்பி ஒப்படைக்குமாறும், தேசிய சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்ற பௌத்த மதகுருமாருக்கு (பிக்குமாருக்கு) உபத்திரவம் செய்ய வேண்டாம் எனவும் கூறி, பொது பல சேனா இயக்கத்தின் முன்னாள் விமர்சனப் பிரிவின் மேலாளர் மஹமித்தவ பஞ்சரதன தேரர் அவ்வியக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரரிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
ஞானஸார தேர்ருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2013.06.17 ஆம் திகதி இடம்பெற்ற தெரண 360 நிகழ்ச்சி தொடர்பாக அன்றைய தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த தாங்கள் என்னைப் பற்றி குறிப்பிட்ட விடயம் பற்றி நான் கவலையையும், அதிருப்தியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு தாங்கள், உங்கள் இயக்கத்தில் மஹமிதவ தேரர் என்றொருவர் இருக்கவில்லை எனவும், அவ்வாறான ஒருவர் பற்றித் தனக்குத் தெரியாதெனவும் குறிப்பிட்டிருந்தீர்.
2012.11,19 ஆம் திகதி தாங்களும் நானும் கலந்துகொண்ட ஹலால் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நான், http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CeJY0WkDVXU இயக்கத்தில் என்ன பதவி வகிக்கின்றேன் என்று நீங்களல்தானே குறிப்பிட்டீர்கள். அத்துடன், தங்களின் இயக்கத்தில் சேர வேண்டிய தேவையினாலேயே அங்கு வந்ததாகவும் தாங்கள் குறிப்பிட்டீர்கள். அதுகூட இட்டுக்கட்டப்பட்ட கதை. நான் தங்களின் அழைப்பின் பேரிலேயே அங்கே சமுகம் தந்தேன். நானாக உடன்பட்டு தங்கள் இயக்கத்தில் சேரவில்லை.
அவ்வாறே, தங்கள் இயக்கத்தின் பெயரை விற்று நான் பணம் திரட்டியதாகக் குறிப்பிடுவதும் ‘பச்சைப்’ பொய். நான் இயக்கத்தின் பெயரைக்காட்டி எந்தவொரு நபரிடமும் பணம் வசூலிக்கவில்லை. இந்தப் பிரச்சினையை உருவாக்கியதே நீங்கள்தான். அதற்குரிய காரணமும் தாங்கள்தான் அறிவீர்கள்! அன்று அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் தகவல் பிரிவில் கடமையாற்றிய நான், அந்தத் தொழிலையும் விட்டுவிட்டு உங்களுக்குச் சேவை செய்தேன். அதற்கு முன்னர் பௌத்தர்களுக்காக நான் செய்த சேவை பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்!
மேலும், இந்தப் பிரச்சினையின் சுயவடிவைத் தெரிந்தவர்கள் நீங்களும் நானுமே! கடைசியாக சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமானது என எண்ணுகிறேன். அதாவது, 2013.01.08 ஆம் திகதி எனது அறைக்கு பலாத்காரமான முறையில் உள்நுழைந்து கைப்பற்றிய எனது பொருட்களைத் திருப்பி என்னிடம் ஒப்படைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடைசியாக நான் கேட்டுக் கொள்வது யாதெனில், தேசிய சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தேரர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல், தங்கள் இயக்கத்தின் பணிகளை நடாத்திச் செல்ல வேண்டுமென்பதே. எங்களுக்குள் இவ்வாறானதொரு பிளவு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த ஹலால் தொடர்பாக நழுவிச் செல்லக்கூடிய பிரச்சாரத்தைக் கொஞ்சம் பிற்போட்டு, உங்கள் இயக்கம் குறிப்பிட்டது போல, பௌத்தர்களுக்கு நல்லதொரு முடிவைப் பெற்றுக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கடைசியாக, சோக்கிரடீஸ் எனும் சிந்தனையாளர் தனது இறுதிநேரத்தில் குறிப்பிட்ட தொரு விடயத்தை நீங்கள் உள்ளிட்ட உங்கள் இயக்கத்தினரின் முன்வைக்கின்றேன். ‘நான் சாவதற்கும் நீங்கள் வாழ்வதற்குமான காலம் நெருங்கிவிட்டது. ஆயினும், எங்கள் இருவருக்குமிடையே கூடுதல் நன்மை யாருக்குக் கிடைக்கும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான்’
இவ்வண்ணம்,
மஹமிதவ பஞ்சரதன தேரர்
முன்னாள் விமர்சன மேலாளர்

What a shame //
ReplyDeleteSo gnanasaara is a big liar too. Leader of raudis
ශ්වසන නාල පරීක්ෂණයක් සිදුකර ඇති බව සඳහන්ව ඇති බවත්,එයින් ඥානසාර හිමියන් බීමත්ව සිටි බවට කරුණු තහවුරුවී ඇති බවත්, ඇයි අපි වැදගත් දෙයක් කතා කරන්න තියෙන කාලය නාස්ති කරගන්නේ..අපි ඊළඟ ප්රශ්නයට යමු.." ඥානසාර හිමියන් පිළිතුර
ReplyDeleteWERADI ARTHA KATANAYA SWAMIN WAHANSE, OBA KALA WARADA MAHAJANAYA IDIRIYE PEHEDILI KARANNA< BORUWATA PRASNAWALIN PITA PANNINNATA EPA< OBA WAHANSE WEREDI KARALA THIYANAWA< SIWURU EDAGENA JANATHAWA MULA KARANNATA EPA, OBA WAHANSE HONDATA ACT KARANAWA, OBA WAHANSE JAAMIYATHUL ULAMA SABAWE AYATA OLAMOTTA ULAMAWARU KIYALA KIWWA ETHAKOTA OBA WAHANSETA BAYBADDA KIYALADA AMATHANNATA KIYANNE< DEBIDI PILIWATHA
kalabola aththo mankollakaraya
ReplyDeleteஇவன்ட முகத்தைப் பார்த்தாலே செழிப்பற்ற பேயடித்தவன் மாதிரிதானே இருக்கிறான். இவன் முன்னர் இருந்தே கயவனாகவே இருந்திருக்கிறான். ஒரு வேளை சிறு வயதிலேயே இவன் கட்டுக் கடங்காத கிள்ளாடியாக இருந்ததால் பெற்றோர்கள் இவனை வீட்டில வைத்து சமாளிக்க முடியாது பன்சலையில கொண்டுபோய் தள்ளிவிட்டிருப்பார்களோ?? இந்தக் கழுதையை திருத்தலாமா? இவன் மண்கொள்ளையன். திருடன். பொய்யன். மது அருந்தி சீரழிந்தவன் இவை வெளிச்சத்துக்கு வந்தவை? பன்சல யின் உள்ளே, வெளியே இன்னும் எத்தனையோ. இவன் ஒரு அதிமுக.அடித்தும் திருத்த முடியாத கழுதை. பிக்குமார்களாலே சீரழிந்து மானம் மரியாதையை கறைக்கின்றான். sorry அது தான் அவனிடம் இல்லையே.
ReplyDelete