ஜே.பிரோஸ்கானின் 'ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம்'
(ஏ.கே.முஜாரத்)
கிண்ணியா ஜே.பிரோஸ்கானின் மூன்றாவது நூலான ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா 2013.06.16 ஞாயிறு காலை 9 மணிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஆறுமுகம் ஜெகசோதி தலைமையில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் மிக சிறப்பாக நடந்தது.இவ் விழாவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ டாக்டர் ஹில்மி மஹ்ரூப் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம நூலகர் எம்.ரீ.சபறுள்ளாகான் வரவேற்புரை நிகழ்த்த நூல் ஆய்வுரையை சட்டத்தரணியும் எழுத்தாளருமான கிண்ணியா சபறுள்ளா வழங்கினார்.இந் நிகழ்வில் தேச கீர்த்தி பீ.ரீ.அஸீஸ் அவர்களால் நூலதசிரியர் மாலையணிவித்து கௌரவிக்கப்பட்டமையும் கவிமணி அ.கௌரிதாசன் அவர்களால் வாழ்த்துப் பா அரங்கேற்றப்பட்டதும் விழாவின் சிறப்பம்சம் மேலும் இவ்விழாவை கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் தொகுத்து வழங்கினார்.


Post a Comment