பூநொச்சிமுனை கடற்பரப்பில்சட்டவிரோத சுருக்கு வலைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நாவலடி பூநொச்சிமுனை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலையை பாவித்து மீன் பிடித்த நான்கு மீனவர்களை பொலிசார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாகவும்; அவர்களிடமிருந்து சட்டவிரோத வலைகளையும் கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பூநொச்சிமுனை கடற்கரையில் வைத்து இரண்டு போட்களில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போதே காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தலைமையிலான எஸ்.ஐ.உபாலி,ஏ.சி.ரஹ்மான்,பொலிஸ் சார்ஜன்களான திலகரட்ண,அபேரட்ண,ஏ.சி.தென்னக்கோன்,கீர்த்தி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதணை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 220 மீற்றர் சட்டவிரோத சுருக்கு வலைகள் கைப்பற்றப்பட்டதுடன் போர்ட் எஞ்சின்களும் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் கைப்பற்றப்பட்ட வலைகளையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் போர்ட் எஞ்சின்கள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment